HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent in Sri Lanka, January 2023

0

Click here to download the full report

සිංහල පරිවර්තනය පහතින් ඇත.

தமிழ் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது.

Executive Summary

Context: Local government elections were announced. Parliament passed the Regulation of Election Expenditure Act, a law that regulates election campaigning. However election monitoring organizations said that the bill is inadequate as it does not provide sufficient details on spending limit for a candidate, and does not include an appropriate monitoring and enforcement mechanism. Several government politicians stated that the elections are not a priority, thus should be postponed prioritising the economic needs. Media reported how children’s education was impacted by the economic crisis, and how unemployment has increased. Several protests were held against rising inflation in Sri Lanka, tax hike and other socio-economic issues. A petition against the government’s decision to increase utility bills received 6.9 million signatures across the country. The Defence Ministry vowed to reduce the military cadre to 100,000 by 2030. Journalists and media organizations commemorated Black January in Colombo, Jaffna and Batticaloa, an annual event to remember and demand justice for the crimes committed against journalists. Media reported that former President Gotabaya Rajapaksa has applied for restoration of his US citizenship. However, Canada imposed sanctions on former Presidents Gotabaya Rajapaksa, Mahinda Rajapaksa and others for “committing gross and systematic violations of human rights.” A bribery case against MP Wimal Weerawansa  regarding unlawful acquisition of wealth estimated at Rs.75 million while serving as a Minister was taken up before the Colombo High Court. The Supreme Court upheld the previous verdict issued by the Colombo High Court punishing former President Maithripala Sirisena’s Chief of Staff for accepting a bribe. A replica of Kandy Dalada Maligawa being constructed in Kurunegala was demolished after the Buddhist monks and politicians alleged it for causing contempt for the Temple of the Sacred Tooth Relic in Kandy.  Anti-government Aragalaya activist Wasantha Jayakody was arrested by the Police for sharing a problematic post in social media during Independence day celebrations. One extra-judicial killing was reported regarding a person who got arrested for possession of drugs. A lesbian woman filed a historic Fundamental Rights petition at the Supreme court against the Sri Lanka Police in Welisara Mahabage. 

Black flags were raised in the heavily militarised northern city of Jaffna demanding justice for murdered journalists whose cases remain in impunity for decades. Photo Courtesy: Tamil Guardian

Case updates: The 14th Death Anniversary of the late Sunday Leader Editor Lasantha Wickrematunge was held in Colombo and Batticaloa. Parliament passed the controversial Bureau of Rehabilitation bill with amendments that earlier attracted wide criticism as an attempt to rehabilitate anti-government protesters, now exclusively focusing on drug rehabilitation. However, Amnesty International and others pointed out that the bill could facilitate torture and ill-treatement in the rehabilitation centres. The convenor of the Inter-University Student Federation Wasantha Mudalige was released from terrorism charges, but held in detention further in relation to several other cases. The Inter-University Bhikku Federation Convener Galwewa Siridhamma Thero was ordered to appear before Terrorism Investigation Division. The Supreme Court ruled that the former President and key officials of Defence and Police at the time had failed to prevent the Easter Sunday bomb attack, despite having prior information, and therefore violated Fundamental Rights of victims. They were ordered to pay 310 million of Sri Lankan Rupees in total as compensation to the victims. The Writ Application filed by former President Sirisena seeking dismissal of summons issued by the Fort magistrate regarding Easter Sunday Bomb attack plaint was fixed for hearing on 31st January. Colombo High Court has issued a court order summoning former Northern Provincial Councillor M K Shivajilingham for remembering a Tamil martyr two and half years ago. The Attorney General filed  contempt of court charges against State Minister Sanath Nishantha who criticised the judiciary for granting bail to those who were involved with the anti-government protest movement.

Remembrance of late journalist Lasantha Wickramatunge at Borella Cemetery in Colombo. Courtesy: Daily Mirror

Local Government Elections: Three election commission members received death threats demanding them to resign from their positions. The Secretary of the Ministry of Public Administration, Home Affairs, Provincial Council and Local Governments issued a letter asking District Secretaries to refrain from accepting deposits from Election candidates based on a cabinet decision.  A retired Army Colonel filed a writ petition against holding Local Government Election during the economic crisis of Sri Lanka.  The United National Party office in Wariyapola was attacked with a petrol bomb by their political opponents. 

Repression of Freedom of Assembly: The Colombo Fort Magistrate issued a restraining order preventing protestors from entering the Galle Face Green in Colombo. The protest was organized by the Inter-University Student Federation demanding the release of its leader Wasantha Mudalige, repeal Prevention of Terrorism Act (PTA) and reduce utility charges. Police fired tear gas and water cannons at the protesters at Colpetty junction in Colombo. The Chairperson of the Kelaniya University Kelum Mudannayake and student activist Dilshan Harshana were arrested by the Thalangama Police for allegedly damaging a gate, and obstructing Police during a protest last year. The Families of the Disappeared, the University Students of Jaffna and civil society activists who protested during the President’s visit to Jaffna for Thai Pongal celebrations were also attacked with tear gas and water cannons. Later Civil society leader Velan Swamigal was arrested for obstructing the Police during the protest. Thambirasa Selvarani, President of Ampara District Organisation of Relatives of the Disappeared, who led a protest in Thirukkovil in Ampara District demanding justice for the disappeared, was summoned to appear before Pottuvil Magistrates’ Court. Mulliyawalai police summoned six Tamil men who organised Maaveerar Naal (Great Heroes day) remembrance events in November last year.  

Demonstration held in front of the UN Head Office in Colombo. Photo Courtesy: Daily Mirror

Repressive Legal and Policy actions: President Ranil Wickremesinghe said that a new bill will be introduced to regulate social media and electronic media similar to the Info-communications Media Development Authority (IMDA) Act 2016 of Singapore.  Two gazette notifications were issued declaring all supplies of electricity, petroleum, fuel and all services of the health sectors as essential services. Declaration as essential services is a well known historical tactic in Sri Lanka to discourage and prevent trade union actions.  The monthly Gazette notification was issued calling out all the armed forces members for maintenance of Public Order, which allows the military to be involved in civilian affairs. 

Other incidents: Power and Energy Minister Kanchana Wijesekera said that he has sought advice to take legal measures against members of Human Rights commission of Sri Lanka for forcefully taking consent of Ceylon Electricity Board officials in issuing an order to provide uninterrupted electricity power during the Advanced Level examinations. State Minister Anuradha Jayaratne stated that some trade unions and student unions can be called as terrorists as they are now attempting to destabilise the country’s economy.  Two trade unionists who went to the Public Utilities Commission of Sri Lanka (PUCSL)along with other civil society activists to show their objection to a change of stance by the commission were later arrested for allegedly threatening the members of the PUCSL. Youtuber Sepal Amarasinghe was arrested by the Criminal Investigation Department over blasphemous remarks on the Temple of Tooth in Kandy and charged under section 3 of the International Covenant on Civil and Political Rights (ICCPR) Act.  Activist Randimage Gamage was arrested by Sri Lanka police upon his arrival at Katunayake Airport over the forceful entry to the Sri Lanka Broadcasting Corporation (SLRC) during the anti-government protests. SSP D.S. Wickremasinghe, the Director of the Special Investigation Unit of the Police, informed the Fort magistrate that he was threatened by SDIG Deshabandu Tennakoon, in charge of Western Province for reporting the facts to the court regarding undue influence made by Tennakoon to hand over the money found inside the President’s house to a Minister, without keeping under court custody.

Click here to download the full report

ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය කිරීම, 2023 ජනවාරි

විධායක සාරාංශය

සන්දර්භය.

පළාත් පාලන ඡන්ද විමසීම ප්‍රකාශයට පත් කෙරිණ. පාර්ලිමේන්තුව ඡන්ද ව්‍යාපාරය නියාමනය කරන මැතිවරණ වියදම් රෙගුලාසි පනත සම්මත කෙළේය. කෙසේ වුවත් ඡන්ද අපේක්ෂකයෙකු ගේ වියදම් පිළිබඳ ප්‍රමාණවත් සීමාවන් ඇතුළත් නොවන නිසාත් සුදුසු අධීක්ෂණ සහ බලාත්මක කිරීමේ යාන්ත්‍රණයක් ඇතුළත් නොවන නිසාත් එම පනත ප්‍රමාණවත් නැතැයි මැතිවරණ නිරීක්ෂණ සංවිධාක පැවසූහ. මැතිවරණ පැවැත්වීම ප්‍රමුඛතාවයක් නොවන නිසා ආර්ථික අවශ්‍යතා ප්‍රමුඛතා කොට ඡන්ද විමසීම කල් දැමිය යුතුයැයි ආණ්ඩුවේ සමහර දේශපාලකයෝ කීහ.  ආර්ථික අර්බූදයෙන් ළමයින්ගේ අධ්‍යාපනයට බලපෑ ආකාරයත් විරැකියාව වැඩි වූ ආකාරයක් ජනමාධ්‍යයෙන් වාර්තා කෙරිණ. ශ්‍රී ලංකාවේ උද්ධමනය ඉහළ යෑම, බදු ඉහළ දැමීම සහ වෙනත් සමාජ ආර්ථික කරුණු ගැන විරෝධතා ගණනාවක් පවැත්විණ. ජල සහ විදුලි බිල්පත් මිල වැඩි කිරීමට ආණ්ඩුව ගත් තීරණයට එරෙහි පෙත්සමකට රටපුරා අත්සන් දශ ලක්ෂ 6.9ක් එකතු කරන ලදී. හමුදා භට සංඛ්‍යාව 2030 වන විට 100,000 දක්වා අඩු කරන බවට ආරක්ෂක අමාත්‍යංශය සඳහන් කෙළේය. ජනමාධ්‍යකරුවෝ සහ මාධ්‍ය සංවිධාන කොළඹ සහ මඩකලපුවේ කලු ජනවාරිය සැමරුහ. එය ජනමාධ්‍යකරුවන්ට සිදු කළ අපරාධවලට එරෙහිව වාර්ෂිකව පවත්වන විරෝධයකි. හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ තම එක්සත් ජනපද පුරවැසි භාවය නැවත ලබා දෙන ලෙස ඉල්ලීමක් කළ බව ජනමාධ්‍ය වාර්තා කෙළේය. කෙසේ වුවත් කැනඩාව ‘‘බරපතළ සහ ක්‍රමානුකුලව මානව අයිතිවාසිකම් උල්ලංඝනය කිරීම පිලිබඳව“ හිටපු ජනාධිපතිවරුන්වන මහින්ද රාජපක්ෂට සහ ගෝඨාභය රාජපක්ෂට සහ තවත් අයට එරෙහිව සම්බාධක පැනවීය. පාර්ලිමේන්තු මංත්‍රී විමල් වීරවංශ ඇමතිවරයෙකු වශයෙන් සිටි කාලයේ දී අනීතිකව උපයා ගන්නා ලද රු. දශ ලක්ෂ 75ක් සේ ගණන් බලන ලද වත්කම් සම්බන්ධයෙන් කොළම මහාධිකරණය ඉදිරියේ ගොනු කර ඇති අල්ලස් නඩුව විභාගයට ගන්නා ලදී. හිටපු ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේනගේ කාර්ය මණ්ඩල ප්‍රධානි අල්ලසක් ලබා ගැනීම පිළිබඳව මහාධිකරණයෙන් ලබා දුන් දඩුවම ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් ද අනුමත කෙරිණ. කුරුණෑගල ඉදි කර තිබු මහනුවර දළදා මාලිගාවේ අනුරුවක් මහනුවර දළදා මන්දිරයට අගරු වන්නේයැයි බෞද්ධ භික්ෂූන් වහන්සේලා සහ දේශපාලකයන් විසින් චෝදනා කළ නිසා විනාශ කරන ලදී. නිදහස් දින සමරු උත්සවය පැවතිය දී ප්‍රශ්න සහගත පළ කිරීමක් බෙදා හැරීම නිසා ආණ්ඩු විරෝධී අරගලයේ ක්‍රියාකාරිකයෙකු වන වසන්ත ජයකොඩි පොලීසියෙන් අත් අඩංගුවට ගන්නා ලදී. මත් කුඩු සන්තකයේ තබා ගැනීම නිසා අත් අඩංගුවට ගෙන සිටි පුද්ගලයෙකු නිතියෙන් පරිබාහිරව මරා දමන ලදැයි වාර්තා විය. සමලිංගික ස්ත්‍රියක් වැලිසර මහබාගේ ශ්‍රි ලංකා පොලීසියට එරෙහිව ඓතිහාසික මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් ශ්‍රේෂ්ඨාධිකරණයේ ගොනු කළාය.   

නඩු යාවත්කාලීන කිරීම්.

සන්ඩේ ලීඩර් කතෘ ලසන්ත වික්‍රමතුංග 14 වැනි මරණානුස්මරණය කොළඹ සහ මඩකලපුවේ දි පවත්වන ලදී. මතභේදයට තුඩු දුන් පුනරුත්ථාපන කාර්යංශ පනත සංශෝධන සහිතව පාර්ලිමේන්තුවෙන් සම්මත විය. කලින් මෙම පනත ආණ්ඩු විරෝධී අරගලකරුවන් පුනරුත්ථාපනය කිරීමේ ප්‍රයත්නයක් සේ  විවේචනයට ලක් වුවද දැන් සුවිශේෂයෙන්ම මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහිවූවන්ට පමණක් අදාල වේ. අන්තර්විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය බල මණ්ඩලයේ කැඳවුම්කරු වසන්ත මුදලිගේ ත්‍රස්තවාදී චෝදනාවලින් නිදහස් වුවද වෙනත් සිද්ධීන් සම්බන්ධයෙන් රැඳවුම් භාරයේ තබා ගෙන ඇත. අන්තර්විශ්ව විද්‍යාල භික්ෂු බල මණ්ඩලයේ කැඳවුම්කරු ගල්වැව සිරිදම්ම හිමිට ත්‍රස්ත විමර්ශන කොට්ඨාශයට ඉදිරිපත් වන්නැයි නියෝග කර ඇත. කලින් සිටි ජනාධිපති සහ ආරක්ෂක අංශයේ සහ පොලීසියේ එවකට සිටි ප්‍රධාන නිලධාරීන් පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාරය පිළිබඳව කලින්ම තොරතුරු ලැබී තිබියදීත් එය වැළැක්වීමට පියවර නොගැනීමෙන් වින්දිතයන්ගේ මූලික අයිතිවාසිකම් උල්ලංඝනය කර ඇතැයි ශ්‍රේෂ්ඨාධිකරණය නිගමනය කර ඇත. වින්දිතයන්ට වන්දියක් ලෙස රු. දශ ලක්ෂ310 ක් ගෙවීමට නියෝග කෙරිණ.  පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාරය සමබන්ධයෙන් පවරා ඇති නඩුවක් අනුව හිටපු ජනාධිපති සිරිසේනට කොටුව මහෙස්ත්‍රාත් නිකුත් කර ඇති සිතාසි ඉවත දමන්නැයි ඉදිරිපත් කර ඇති රිට් අයැදුම් පත විභාග කිරීමට ජනවාරි 31 වැනි දාට නියම විය.  වසර දෙක හමාරකට පෙර දෙමළ දිවි පිදු වීරයින් සිහිපත් කිරීම සම්බන්ධයෙන් උතුරු පළාත් සභා හිටපු මංත්‍රී ඇම් කේ සිවාජිලිංගම් ට කොළඹ මහාධිකරණයෙන් සිතාසි නිකුත් කරන ලදී. නීතිපති විසින් ආණ්ඩු විරෝධී අරගලකරුවන්ට ඇප ලබා දීම පිළිබඳව අධිකරණය විවේචනය කළ රාජ්‍ය ඇමති සනත් නිෂාන්තට එරෙහිව අධිකරණයට අපහාස කිරීමේ චෝදනා ගොනු කරන ලදී.

කොළඹ බොරැල්ල කනත්තේදී අභාව ප්‍රාප්ත ජනමාධ්‍යවේදී ලසන්ත වික්‍රමතුංග සිහිපත් කිරීම Courtesy: Daily Mirror

පළාත් පාලන ඡන්ද විමසීම.

මැතිවරණ කොමිසමේ සාමාජිකයන් තිදෙනෙකුට සිය තනතුරුවලින් ඉල්ලා අස්වීමට බල කරමින් මරණ තර්ජන නිකුත් කර ඇත. කැබිනට් තීරණයක් අනුව රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු සහ පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්‍යංශයේ ලේකම් ඡන්ද අපේක්ෂකයන්ගේ ඇප මුදල් බාර ගැනීමෙන් වැළකී සිටින ලෙස දිස්ත්‍රික් ලේකම් වරුන්ට දැන් වූයේය. ශ්‍රී ලංකාවේ පවතින ආර්ථික අර්බුදය හමුවේ පළාත් පාලන ඡන්ද විමසීම් පැවැත්විමට එරෙහිව විශ්‍රාමික හමුදා කර්නල් කෙනෙකු රිට් අයැදුම් පතක් ඉදිරිපත් කෙළේය. එක්සත් ජාතික පක්ෂයේ වරකපොළ කාර්යාලයට විරුද්ධ දේශපාලන පක්ෂයක පුද්ගලයන් තිදෙනෙක් පැට්ට්‍රල් බෝම්බ ප්‍රහාරයක් එල්ල කළහ.

රැස්වීමේ නිදහස මර්දනය කිරීම.

කොළඹ කොටුව මහෙස්ත්‍රාත් විරෝධතාකරුවන්ට කොළඹ ගාලු මුවදොර පිට්ටනියට ඇතුලුවීම වළක්වාලමින් තහනම් නියෝගයක් නිකුත් කෙළේය. අන්තර්විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය බලමණ්ඩලය මෙම විරෝධතාවය සංවිධානය කර තිබුණේ එහි නායක වසන්ත මුදලිගේ නිදහස් කිරීම, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත ඉවත කිරීම සහ ජල සහ විදුලි ගාස්තු පහත දැමීමට බල කිරීම සඳහා ය. පොලිසිය කොළඹ කොල්ලුපිටිය හන්දියේ දී විරෝධතාකරුවන්ට ජල ප්‍රහාර සහ කඳුලු ගෑස් ප්‍රහාර එල්ල කෙළේය. කැළණිය විශ්ව විද්‍යාලයේ මහා ශිෂ්‍ය සංගමයේ සභාපති කැලුම් මුදන්නායක සහ ශිෂ්‍ය ක්‍රියාකාරික දිල්ෂාන් හර්ෂණ පසුගිය වසරේ ගේට්ටුවකට අලාභ හානි සිදු කිරීම සහ පොලීසියට බාධා කිරීම යන චෝදනා යටතේ තලංගම පොලීසිය විසින් අත් අඩංගුවට ගෙන ඇත. අතුරුදහන් වූවන්ගේ පවුල්, යාපනය විශ්ව විද්‍යාලයේ ශිෂ්‍යයන් සහ සිවිල් සමාජ ක්‍රියාකාරීහු තයිපොංගල් උත්සවවලට යාපනයට පැමිණි ජනාධිපතිට එරෙහිව උද්ඝෝෂණ පැවැත් වූහ. පසුව විරෝධතාවයේ දී පොලීසියට බාධා කෙළේයැයි සිවිල් සමාජ නායකයෙකු වන වෙලන් ස්වාමිගල් පොලීසියෙන් අත් අඩංගුවට ගත්තේය. අතුරුදහන් වූවන් වෙනුවෙන් යුක්තිය ඉල්ලා අම්පාර දිස්ත්‍රික්කයේ තිරුක්කෝවිල් හි විරෝධතා පැවැත් වූ අම්පාර දිස්ත්‍රික්කයේ අතුරුදහන් වූවන්ගේ ඥාතීන්ගේ සංවිධානයේ අම්පාර දිස්ත්‍රික් සභාපති තම්බිරාසා සෙල්වරාණිට පොතුවිල් මහෙස්ත්‍රාත් උසාවියට ඉදිරිපත්වීමට සිතාසි නිකුත් කරන ලදී. පසුගිය වසරේ නොවැම්බර් මස මහාවීර දින සැමරුම් උත්සවයක් සංවිධානය කළ දෙමළ පුද්ගලයන් හය දෙනෙකු මුල්ලියාවලෙයි පොලීසියට කැඳවන ලදී.

කොළඹ එ ජා ප්‍රධාන කාර්යාලය ඉදිරිපිට පැවැත් වූ විරෝධතාවය. Photo Courtesy: Daily Mirror

මර්දනකාරී නෛතික සහ ප්‍රතිපත්ති පියවර.  

සමාජ මාධ්‍යය සහ විද්‍යුත් මාධ්‍යය නියාමනය කිරීමට සිංගප්පූරුවේ 2016 තොරතුරු සන්නිවේදන මාධ්‍ය සංවර්ධන අධිකාරිය පනතට IMDA සමාන පනතක් හඳුන්වා දෙන බව ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ පැවසුවේය. විදුලිය, පෙට්‍රෝලියම්, ඉන්ධන සැපයුම් සහ සියලු සෞඛ්‍ය සේවා අත්‍යවශ්‍ය බව ප්‍රකාශ කරමින් ගැසට් නිවේදන දෙකක් නිකුත් කරන ලදී. අත්‍යාවශ්‍ය සේවා ලෙස ප්‍රකාශ කිරීම වාත්තීය සමිති ක්‍රියාමාර්ග අධෛර්ය කිරීමට සහ වැළැක්වීමට ශ්‍රී ලංකාව යොදා ගන්නා සුපුරුදු ක්‍රියා මාර්ගයකි. සියලු සන්නද්ධ සේවා සාමාජිකයන් මහජන සාමය පවත්වා ගැනිමට කැඳවන බව දැක්වෙන මාසික ගැසට් නිවේදනයක් නිකුත් කරන ලදී.  

වෙනත් සිද්ධීන්.

උසස් පෙළ විභාගය පැවැත්වෙන සමයේ විදුලි බලය බාධාවකින් තොරව සැපයීමට නියෝගයක් නිකුත් කිර සඳහා ලංකා විදුලි බල මණ්ලයේ සාමාජිකයන්ගේ අනුමැතිය බලහත්කාරයෙන් ලබා ගැනීම පිළිබඳව ශ්‍රි ලංකා මානව හිමිකම් කොමිසමේ සාමාජිකයන්ට එරෙහිව නිතිමය පියවර ගැනීමට උපදෙස් ලබා ගන්නා බව විදුලි සහ බලශක්ති ඇමති කන්චන විජේසේකර ප්‍රකාශ කෙළේය. සමහර වෘත්තීය සමිති සහ ශිෂ්‍ය සංගම් දැන් රටේ ආර්ථිකය අස්ථාවර කිරීමට උත්සාහ ගන්නා නිසා ඒවා ත්‍රස්තවාදී ලෙස නම් කළ හැකියැයි රාජ්‍ය ඇමති අනුරාධ ජයරත්න පැවසුවේය. කොමිසම තම ස්ථාවරය වෙනස් කිරීම පිලිබඳව  විරෝධය පළ කිරීමට වෙනත් සිවිල් සමාජ ක්‍රියාකාරීන් සමග මහජන උපයෝගිතා කොමිසමට ගිය වෘත්තීය සමිති නායකයන් දෙදෙනෙකු පසුව කොමිසමේ සාමාජිකයන්ට තර්ජනය කෙළේයැයි අත් අඩංගුවට ගෙන ඇත. මහනුවර දළදා මාලිගාවට අපහාස වන ආකාරයේ සඳහනක් කරන ලද්දේයැයි යු ටියුබ් වාර්තාකරු සේපාල් අමරසිංහ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් අත් අඩංගුවට ගෙන සිවිල් සහ දේශපාලන අයිතිවාසිකම් පිළිබඳ අන්තර්ජාතික සන්ධානයේ (ICCPR) 3 ඡේදය යටතේ චෝදනා ගොනු කර ඇත. ආණ්ඩු විරෝධී උද්ඝෝෂණ පැවති සමයේ ශ්‍රි ලංකා ගුවන් විදුලි සංස්ථාවට බලහත්කාරයෙන් ඇතුලු වීම සම්බන්ධයෙන් සමාජ ක්‍රියාකාරික රන්දිම ගමගේ විදේශයක සිට කටුනායක ගුවන් තොටු පොළට පැමිණි විට පොලීසියෙන් අත් අඩංගුවට ගන්නා ලදී. ජනාධිපති මන්දිරයේ තිබී සොයා ගන්නා ලද මුදල් අධිකරණය භාරයේ  නොතබා ඇමතිවරයෙකුට භාර නොදීම සම්බන්ධයෙන්  බස්නාහිර පළාත භාර ජ්‍යේෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති දේශබන්ධු තෙන්නකෝන් අනිසි බලපෑම් කළ බව පොලිසියේ වි‍ශේෂ විමර්ශන ඒකකයේ ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරි ඩී ඇස් වික්‍රමසිංහ කොටුව මහෙස්ත්‍රාත්ට දැනුම් දුන්නේය.

இலங்கையில் கருத்து வேறுபாடுகளை அடக்குதல், ஜனவரி 2023

நிறைவேற்றுச் சாராம்சம்

சூழல்: உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமான தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. எவ்வாறாயினும், ஒரு வேட்பாளருக்கான செலவு வரம்பு குறித்த போதுமான விவரங்களை வழங்காததாலும் அத்துடன் சரியான கண்காணிப்பு மற்றும் அமுலாக்கல் பொறிமுறையை உள்ளடக்காததாலும் இந்தச் சட்டமூலம் போதுமானதாக இல்லை என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன. பல அரசாங்க அரசியல்வாதிகள் தேர்தல்கள் முன்னுரிமை அல்ல, எனவே பொருளாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கூறினார். பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளின் கல்வி எவ்வாறு பாதிக்கப்பட்டது, வேலையில்லாத் திண்டாட்டம் எவ்வாறு அதிகரித்தது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இலங்கையில் அதிகரித்து வரும் பணவீக்கம், வரி உயர்வு மற்றும் பிற சமூக-பொருளாதார பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. பயன்பாட்டுச் சிட்டைகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான ஒரு மனு நாடு முழுவதும் 6.9 மில்லியன் கையொப்பங்களைப் பெற்றது. 2030க்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000ஆக குறைக்க பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது. ஊடகவியலாளர்களினாலும் மற்றும் ஊடக நிறுவனங்களினாலும் கொழும்பிலும் மற்றும் மட்டக்களப்பிலும் கறுப்பு ஜனவரி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இது ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை நினைவுகூர்ந்து நீதி கோரும் வருடாந்த நிகழ்வாகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை மீளக் கோரி விண்ணப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் பலர் மீது “மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களை செய்ததற்காக” பொருளாதாரத் தடைகளை கனடா விதித்தது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அமைச்சராக கடமையாற்றிய போது சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைக் கையகப்படுத்தியமை தொடர்பான இலஞ்ச வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைப் பிரதானி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குருநாகலில் நிர்மாணிக்கப்படும் கண்டி தலதா மாளிகையின் நேர்படி கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதாகச் சார்த்துரைத்து பௌத்த பிக்குகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் குற்றம் சுமத்தியதையடுத்து இடிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பதிவைப் பகிர்ந்ததற்காக அரச எதிர்ப்புச் செயற்பாட்டாளர் வசந்த ஜயக்கொடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் மீது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட கொலை ஒன்று பதிவாகியுள்ளது. வெலிசர மஹாபாகேயில் உள்ள இலங்கைப் பொலிஸாருக்கு எதிராக தன்னினச்சேர்க்கையாளரான பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வரலாற்றுரீதியிலான அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 விடயப் புதுப்பிப்புகள்: காலஞ்சென்ற ‘சண்டே லீடர்’ பதிப்பாசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 14ஆவது நினைவு தினம் கொழும்பிலும் மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெற்றது. சர்ச்சைக்குரிய புனர்வாழ்வு பணியகச் சட்டமூலத்தைப் பாராளுமன்றம் திருத்தங்களுடன் நிறைவேற்றியதுடன், இது முன்னர் அரசாங்க எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியாக பரவலான விமர்சனங்களை ஈர்த்ததுடன், இப்போது போதைப்பொருள் மறுவாழ்வில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகிறது. எவ்வாறாயினும், புனர்வாழ்வு நிலையங்களில் சித்திரவதைக்கும் மற்றும் மோசமாக நடத்தப்படுவதற்கும் இந்தச் சட்டமூலம் உதவக்கூடும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் மற்றும் ஏனையவையும் சுட்டிக்காட்டின. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மேலும் பல வழக்குகள் தொடர்பாக  அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரரை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை முன்னரே அறிந்திருந்தும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு மற்றும்பொலிஸ் ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகள் தடுக்கத் தவறியதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக மொத்தமாக 310 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான முறைப்பாடு தொடர்பில் கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை நிராகரிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தாக்கல் செய்த பேராணை (writ) மனு எதிர்வரும் ஜனவரி 31 அன்று விசாரணைக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தமிழ்த் தியாகி ஒருவரை நினைவு கூர்ந்தமைக்காக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிணை வழங்கிய நீதித்துறையை விமர்சித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை சட்டமா அதிபர்  தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு பொரளை மயானத்தில், மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவேந்தல். நன்றி: டெய்லி மிரர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்:  அவர்களது பதவிகளை இராஜினாமா செய்யக் கோரி கொலை மிரட்டல்ளை மூன்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள்  பெற்றுள்ளனர். அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில், தேர்தல் வேட்பாளர்களிடம் இருந்து வைப்புத்தொகை பெறுவதைத் தவிர்க்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கடிதம் ஒன்றை விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவர் பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்தார். வாரியபொலவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது அவர்களது அரசியல் எதிரிகளால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒன்று கூடும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை: கொழும்பு காலி முகத் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் தலைவர் வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை [Prevention of Terrorism Act (PTA)] இரத்துச் செய்யுமாறும், பயன்பாட்டுக் கட்டணங்களைக் குறைக்குமாறும் கோரி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​வாயிலொன்றைச் சேதப்படுத்தியமை மற்றும் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் களனி பல்கலைக்கழகத்தின் தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் டில்ஷான் ஹர்ஷன ஆகியோர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தைப்பொங்கல் விழாவிற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், போராட்டத்தின் போது  பொலிலிஸாரைத் தடுத்ததாக சிவில் சமூகத் தலைவர் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் தலைவர் தம்பிராசா செல்வராணியை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  நொவம்பரில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த ஆறு தமிழர்களுக்கு முள்ளியவளை பொலிஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புகைப்பட உபயம்: டெய்லி மிரர்

அடக்குமுறை சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள்: சிங்கப்பூரின் 2016 தகவல் தொடர்பாடல்கள் ஊடக அபிவிருத்தி அதிகார சபை [Info-communications Media Development Authority (IMDA)] சட்டம்  போன்று சமூக ஊடகங்ளையும் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களையும் ஒழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் மற்றும் சுகாதாரத் துறைகள் ஆகியவற்றின் சகல சேவைகளும் அத்தியாவசியச் சேவைகளாக பிரகடனப்படுத்தும் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசியச் சேவைகளாக பிரகடனம் செய்வது இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை அதைரியப்படுத்துவதற்கும் மற்றும் தடுப்பதற்கும் நன்கு அறியப்பட்ட ஒரு வரலாற்று தந்திரமாகும். சிவில் விவகாரங்களில் இராணுவத்தினரை ஈடுபட அனுமதிக்கும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக சகல ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைக்கும் மாதாந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஏனைய சம்பவங்கள்: உயர்தரப் பரீட்சைக் காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான உத்தரவுக்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகளின் சம்மதத்தைப் பலவந்தமாக பெற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை கோரியுள்ளதாக மின், சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சில தொழிற்சங்கங்களையும் மற்றும் மாணவர் தொழிற்சங்கங்களையும் பயங்கரவாதிகள் என அழைக்க முடியும் என ராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு ஆட்சேபனையை  காட்டுவதற்காக​ ஏனைய  சிவில் சமூக ஆர்வலர்களுடன் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு [Public Utilities Commission of Sri Lanka (PUCSL)] சென்ற இரு தொழிற்சங்கவாதிகள் பின்னர் PUCSL உறுப்பினர்களை அச்சுறுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். கண்டியில் உள்ள புனிததந்த ஆலயம் பற்றிய அவதூறான கருத்துக்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் யூடியூபர்  சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை [International Covenant on Civil and Political Rights (ICCPR) Act)] சட்டத்தின் பிரிவு 3இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டார். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு [Sri Lanka Broadcasting Corporation (SLRC)] பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டில் செயற்பாட்டாளரான ரண்டிமகே கமகே கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதியின் வீட்டில் சிக்கிய பணத்தை நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்காமல் அமைச்சர் ஒருவரிடம் கையளிக்க வேண்டும் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான SDIG தேசபந்து தென்னக்கோனினால் செய்யப்பட்ட  தகாத செல்வாக்கு தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்காக தென்னக்கோன் தன்னை அச்சுறுத்தியதாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  SSP டி.எஸ்.விக்கிரமசிங்க கோட்டை நீதவானிடம் தெரிவித்தார்.

Comments

Comments are closed.

Popular Posts

Login/Sign up