HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent in Sri Lanka, July 2023

0

Click here to download full report

සිංහල පරිවර්තනය පහතින් ඇත.

தமிழ் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது.

Executive Summary

Context: Sri Lanka parliament approved a domestic debt restructuring plan. Fitch Ratings downgraded Sri Lanka’s Issuer Default Rating (IDR) to ‘C’ (Near default) from ‘CC’ (Very high levels of credit risk). Trade unions protested against the proposed changes in the labour laws, and debt restructuring process that will affect the superannuation funds of employees. Bilateral talks were held between India and Sri Lanka on a range of issues including the implementation of 13th amendment of the Sri Lankan constitution relating to the devolution of power at the provincial level.  Former Chief of Defence Staff Admiral Ravi Wijegunaratne received appointment as Sri Lanka’s High Commissioner to Pakistan. He has been previously accused of human rights violations during Sri Lanka’s civil war. Sri Lanka rejected the visa to the Canadian Tamil MP  Gary Anandasangaree. Civil society organisations in the North and East issued statements expressing their dissatisfaction to the Proposed National Unity and Reconciliation Commission (NURC) and advocating for an international investigation process, as similar domestic mechanisms in the past have failed to bring justice. A group of Muslim MPs in the parliament submitted a letter to the Justice Minister opposing the proposed progressive amendments in the Muslim Marriage and Divorce Act (MMDA). A protest march was organised remembering the 200 years of history of Malaiyaha Tamils, and demanding their rights. Several events were organised remembering the 40th anniversary of Black July pogrom against Minority Tamils in July 1983. As two former LTTE members accused of terrorist attacks were granted presidential pardon, MP  Namal Rajapaksa also requested presidential pardon to the handful of government military who are convicted for war crimes. A hartal was organised in the North and East, demanding an international inquiry into the recently discovered mass grave in Mullaitivu District. The Sri Lanka Human Rights Commission (HRCSL) stated that it is struggling to handle the 11,000 public complaints it had received, due to its shortage of staff.

A long protest march was held demanding rights and dignity for Malaiyaha Tamils who have been subjected to historical discrimination and injustices. Courtesy: Daily Mirror

Case updates: Former President Sirisena and others paid less than 9% of the total compensation to the victims of the Easter Sunday Bomb attack in 2018, by the end of the six months deadline as court ordered in last January.  In relation to the case on the disappeared journalist Prageeth Ekneligoda in 2010, the attorney general requested court’s permission to present additional evidence in relation to eight phone numbers, for which defence attorneys opposed. Next court hearing is to be held in September.

Nathasha Edirisooriya, after being released on bail, in front of Colombo Fort magistrate court.

Female stand up comedian Nathasha Edirisooriya was granted bail by the Colombo High Court. The bail order included a much progressive interpretation of the ICCPR, considering broader aspects of international law.  Colombo High Court dismissed the revision petition filed by journalist Tharindu Jayawardana seeking to invalidate an order issued by the Colombo magistrate court to conduct an inquiry on alleged contempt of court accusations in relation to the press briefing they held condemning the recent arrest of the female comedian. Former employee of the Swiss Embassy in Sri Lanka, Garnia Bannister Francis, was sentenced to two years rigorous imprisonment, suspended for a period of fifteen years, for allegedly making a false statement to the law enforcing authorities claiming that she was assaulted and sexually harassed by five unknown men, for being involved with the Visa process of an exiled Police officer.  Student activist Wasantha Mudalige was arrested and granted bail for not appearing in a court case against him in relation to a protest he took part in three years ago. The magistrate revoked the travel ban imposed on the Senior Police officer, SDIG Deshabandu Tennakoon in relation to not preventing the mob attack on Galleface protesters in May 2022.  A date was fixed for hearing the contempt of Court case against the MP Sanath Nishantha, the State Minister of Water Supply on 27th of September this year. The Supreme Court  dismissed both Fundamental rights petitions on attacks and arrests of participants of the Mirihana protest on 31st March 2022 that later led to Aragalaya anti-government protest movement, and not taking actions to prevent mob attack on Galleface protesters in May 2022, refusing to grant leave to proceed considering the initial objections raised by the state counsels.   However, hearing a writ petition on attack on the Galleface protesters in May 2022, the Court of Appeal ordered the Inspector General of Police to appear at the courts. The Bribery and Corruption Commission informed the court that it expects to record a statement from the former President Gotabaya Rajapaksha in relation to the 17.85 million LKR cash found in the presidential premises by the protesters. MP Namal Rajapaksha and four other suspects requested the court to acquit them from the Money laundering case against them. The Attorney General informed the court that the proposed Private Member bill to reconvene local government bodies without holding elections, is unconstitutional. The Anti Corruption Act was unanimously passed, as all 196 proposed amendments were included in the amended bill.

NameOrdered to payPaidPercentage Paid
The former President, Mathripala Sirisena100 million LKR 15 million LKR 15%
The former IGP Pujith Jayasundera75 million LKR 1.7 million LKR 2.3%
The former Director of SIS, Nilantha Jayawardena75 million LKR 4.1 million LKR 5.5%
The former Secretary, Defence Hemasiri Fernando50 million LKR 1 million LKR 2%
The former CNI Sisira Mendis 10 million LKR 5  million LKR50%
Sri Lankan State1 million LKR 1 million LKR 100%
Total311 million LKR27.8 million LKR8.9%
Table: Amounts ordered to pay and paid. Sources: Supreme Court judgement SC FR 163/2019 and Daily Mirror

Click here to download full report

Repression of Media and Journalists: The Police physically assaulted and arrested the journalist and media rights activist Tharindu Uduwaragedara while covering a trade union protest in Colombo. Dharshana Handungoda, a Youtuber and a Journalist was summoned to the Financial Crime Division in Narahenpita in Colombo, linking him with another youtube channel that first published video of the controversial performance of the comedian who was arrested. He was also ordered by the magistrate court to hand over his electronic equipment to the CID of Police in relation to a statement he made in a youtube video accusing a few officials in the AG department for causing a delay in taking legal actions against the X-press pearl ship that sank in SriLankan waters in May 2021.  The Colombo Mayor of the Colombo Municipal Council also made a complaint on alleged defamation against the same Youtuber in relation to another incident. A Regional Journalist of Lankadeepa newspaper was assaulted by two unknown men, while he was at his office providing information to the Police about a recent incident of some unknown persons breaking into his office.

Media Rights activist and journalist Tharindu Uduwaragedara was assaulted and then arrested by the Police while reporting a protest organised by a collective of trade unions. 28th July 2023, Colombo. Photo Courtesy: the leader  

Repression of Freedom of Assembly: A silent protest commemorating the Black July anti-Tamil pogrom in 1983 was disrupted by Sinhala nationalists and Police, while another protest march in Colombo remembering the Black July was also dispersed by the Police, who attacked the protesters with tear gas and water.  A protest held in Colombo against the proposed labour law amendments and debt restructuring plan which involves using the superannuation funds, organised by a joint Trade union collective was dispersed by the Police attacking protesters with tear gas and water. Court orders were issued against three trade union protests, including this. Activist Maurine Noor was summoned to the CID several hours after her Fundamental Rights petition in relation to her arbitrary arrest during a protest in last May was granted leave to proceed. 

As the riot police dispersed the event by pushing off the protesters violently, activists Sandya Ekneligoda, lawyer Srinath Perera fell to the ground. Photo Courtesy. Ishara Kodikara

Repressive Legal and Policy Actions: A circular issued by the Ministry of Health banned its employees from expressing opinions to the media without the approval of their department head. The circular also referred to the recent Supreme Court judgement which upheld the interdiction of Dr. Chamal Sanjeewa for revealing alarming rates of child malnutrition in the country. A gazette notification was issued making several public services as essential services, which is a known strategy for discouraging trade union actions such as labour strikes.  The monthly gazette notification was issued calling for the Armed Forces by the President justifying and providing powers for increased military intervention in civilian affairs.  

Other Incidents: Director of Police Special Investigation Unit who earlier refused to hand over cash found in the President’s house to the Public Security as instructed by a Senior officer, and was subsequently threatened was transferred  as the Director of Research and Development Division of the police department. Several websites expressed their concerns, whether the transfer was an act of retribution. Minister of Urban Development and Housing, Prasanna Ranathunga speaking at a SLPP party event said that anyone who harasses their party supporters would face retribution.

Click here to download full report

ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය, 2023 ජුලි

විධායක සාරාංශය.

සන්දර්භය.

දේශීය ණය ප්‍රතිවයුහගත කිරීමේ සැලැස්ම පාර්ලිමේන්තුවෙන් සම්මත විය. පිච් රේටිං ආයතනය ශ්‍රී ලංකාවේ නිකුත්කරන්නාගේ පැහැර හැරීමේ අනුපාතය (Issuer Default Rating) සී (පැහැර හැරීම ට ආසන්න) තත්වයේ සිට සීසී (ණය අවදානම ඉතා ඉහළ මට්ටමක) දක්වා පහත හෙළන ලදී. වෘත්තීය සමිති කම්කරු නීතිවලට යෝජිත සංශෝධනවලට සහ සේවක විශ්‍රාමික අරමුදල්වලට බලපාන ණය ප්‍රතිව්‍යුහ ගත කිරීමේ ක්‍රියාවලියට විරෝධය දැක් වූහ. පළාත් මට්ටමේ බලය බෙදා හැරීම පිළිබඳ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 13 වැනි සංශෝධනය ක්‍රියාත්මක කිරීම ඇතුළත් කරුණු ගණනාවක් ගැන ඉන්දියාව සහ ශ්‍රී ලංකාව අතර ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වින. හිටපු ආරක්ෂක කාර්ය මණ්ඩල ප්‍රධානි අද්මිරාල් රවි විජේගුණරත්න පාකිස්ථානයේ ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් වශයෙන් පත් කරන ලදී. ඔහුට ශ්‍රී ලංකාවේ සිවිල් යුද සමයේ මානව අයිකිවාසිකම් උල්ලංඝනය කිරීම් පිළිබද චෝදනා එල්ල වී තිබිණ. ශ්‍රී ලංකාව කැනේඩියානු පාර්ලිමේන්තු මංත්‍රී ගාරි ආනන්දසාගරීට වීසා ලබා දීම ප්‍රතික්ෂේප කෙළේය. උතුරු සහ නැගෙනහිර සිවිල් සමාජ සංවිධාන යෝජිත ජාතික එකමුතු සහ සංහිඳියා කොමිසම ගැන  තම අසතුට ප්‍රකාශ කරමින් අතීතයේ මෙවැනි දේශීය යාන්ත්‍රණවලින් යුක්තිය ඉටු කිරීමට අපොහොසත් වූ නිසා අන්තර්ජාතික විමර්ශන ක්‍රියාවලියක් ඉල්ලා ප්‍රකාශයක් නිකුත් කළහ. පාර්ලිමේන්තුවේ මුස්ලිම් මංත්‍රීන් කණ්ඩායමක් මුස්ලිම් විවාහ සහ දික්කසාද පනතට යෝජිත සංශෝධනවලට විරුද්ධව ලිපියක් අධිකරණ ඇමතිට භාර දුන්හ. මලයාහ දෙමළ ජනතාවගේ වසර 200ක ඉතිහාසය සිහිපත් කරමින් සහ අයිතිවාසිකම් ඉල්ලා විරෝධතා පෙළපාලියක් සංවිධානය කරන ලදී. 1983 ජුලි මාසයේ සුලුතර දෙමළ ජනතාවට එරෙහි කලු ජුලි ඝාතනවලට වසර 40ක් ගතවීමේ අනුස්මණ රැස්වීම් ගණනාවක් සංවිධානය කර තිබිණ. ත්‍රස්තවාදි ප්‍රහාර සම්බන්ධයෙන් දඩුවම් නියම වී සිටි එල්ටීටීඊයේ හිටපු සාමාජිකයන් දෙදෙනෙකුට ජනාධිපති සමාව හිමි විය. යුද අපරාධ සම්බන්ධයෙන් දඩුවම් නියම වූ හමුදාවේ නිලධාරීන් කීප දෙනෙකුට ද සමාව ලබා දෙන ලෙස පාර්ලිමේන්තු මංත්‍රී නාමල් රාජපක්ෂ ඉල්ලා සිටියේය. මුලතිවු දිස්ත්‍රික්කයේ මෑතක දී සොයා ගත් සමූහ මිනී වළ ගැන අන්තර්ජාතික පරීක්ෂණයක් පවත්වන ලෙස ඉල්ලා උතුර සහ නැගෙනහිර හර්තාලයක් සංවිධානය කර තිබිණ. කාර්ය මණ්ඩල හිගකම නිසා ලැබී ඇති පැමිණිලි 11,000ක් ගැන කටයුතු කිරීමට දුෂ්කරයැයි මානව හිමිකහ් කොමිසම ප්‍රකාශ කෙළේය.  

නඩු යාවත්කාලීන කිරීම.

පසුගිය වසරේ ජනවාරි මස අධිකරණයෙන් නියෝග කළ පරිදි මාස හයක් අවසානයේ දී හිටපු ජනාධිපති සහ අනෙකුත් අය 2018 පාස්කු ඉරිදා බෝම්බ පුහාරය වෙනුවෙන් වින්දිතයන්ට වන්දි වශයෙන් ගෙවා තිබුණේ නියම කරන ලද වන්දි මුදලෙන් 9% ක් පමණි. 2010 අතුරුදහන් කළ ජනමාධ්‍යවේදී ප්‍රගීත් එක්නැලිගොඩගේ නඩුව සම්බන්ධයෙන් දී ඇති දුරකතන අංක අට වෙනුවට අතිරේක සාක්ෂි ඉදිරිපත් කිරීමට නීතිපති අවසර ඉල්ලා සිටි නමුත් විත්තියේ නීතිඥවරු ඊට විරුද්ධ වූහ. ඊළඟ නඩු විභාගය සැප්තැම්බර් මාසයට නියම කෙරිණ. වේදිකා ප්‍රහසන ශිල්පිනී නටාෂා එදිරිසිංහට කොළඹ මහාධිකරණයෙන් ඇප ලබා දෙන ලදී. ඇප ලබා දෙන ලද්දේ අන්තර්ජාතික නීතියේ පුලුල් ලක්ෂණ සලකා බලා ICCPR පනත වඩාත් ප්‍රගතිශීලි ආකාරයට අර්ථ ගැන්වීමෙනි. මෑතක දී ප්‍රහසන ශිල්පිනිය අත් අත් අඩංගුවට ගැනීම හෙළා දැකීමට පවත් වන ලද පුවත් සාකච්ඡාව අධිකරණයට අපහාස කිරීමක්යැයි චෝදනා කෙරෙන පරීක්ෂණයක් පැවැත්වීමට කොළඹ මහෙස්ත්‍රාත් අධිකරණය කළ

කිරීමක් දේ සලකන නියෝගය අවලංගු කරන ලෙස ඉල්ලා ජනමාධ්‍යවේදී තරිඳු ජයවර්ධන ඉදිරිපත් කළ පුනරීක්ෂණ අයැදුම් පත කොළඹ මහාධිකරණයෙන් ඉවත දමන ලදී. රටින් පිටව ගිය පොලිස් නිලධාරියෙකු ගේ වීසා බලපත්‍ර ලබා ගැනීමේ ක්‍රියාවලියට සම්බන්ධ වීම නිසා හඳුනා නොගත් පුද්ගලයන් පස් දෙනෙකු ඇය පැහැර ගෙන ගොස් පහර දී ලිංගික අතවර කෙළේයැයි පවසමින් නීතිය බලාත්මක කරන නිලධාරීන්ට සාවද්‍ය ප්‍රකාශයක් ලබා දීම සම්බන්ධයෙන් ස්විස් තානාපති කාර්යාලයේ හිටපු සේවිකාවක් වන ගාර්නියා බැනිස්ටර් ප්‍රැන්සිස්ට බරපතළ වැඩ සහිත වසර දෙකක සිර දඩුවමක් නියම වූ අතර එය වසර පහළොහකට අත් හිටුවන ලදී. වසර තුනකට පෙර පවත්වන ලද විරෝධතාවයකට සහභාගිවීම සමබන්ධයෙන් උසාවියට ඉදිරිපත් නොවීම සම්බන්ධයෙන් ශිෂ්‍ය ක්‍රියාකාරික වසන්ත මුදලිගේ අත් අඩංගුවට ගෙන ඇප මත නිදහස් කරන ලදී. 2022 මැයි මස ගාලු මුවදොර විරෝධතාකරුවන්ට මැර කණ්ඩායමක් විසින් පහර දීම වැළැක්වීමට පියවර නොගැනීම සම්බන්ධයෙන් නියෝජ්‍ය පොලිස්පති දේශබන්ධු තෙන්නකෝන්ට පනවා තිබු සංචාරක තහනම මහෙස්ත්‍රාත් ඉවත් කෙළේය. ජල සැපයුම් රාජ්‍ය අමාත්‍ය පාර්ලිමේන්තු මංත්‍රී සනත් නිශාන්ත අධිකරණයට අපහාස කිරීම සම්බන්ධයෙන් පවරා ඇති නඩුව මෙම වසරේ සැප්තැම්බර් 27 විභාගයට ගැනිමට දින නියම විය. පසුව ඇති වූ ආණ්ඩු විරෝධී විරෝධතා ව්‍යාපාරයට හේතු වූ අරගලයේ ආරම්භයක් සේ සැලකෙන 2022 මැයි 31 මිරිහානේ පැවැත් වූ විරෝධතාවයට සහභාගි වූවන්ට පහරදීම සහ අත් අඩංගුවට ගැනීම සහ 2022 මැයි මස ගාලුමුවදොර විරෝධතාකරුවන්ට මැර කණ්ඩායමක් විසින් පහරදීම වැළැක්වීමට පියවර නොගැනිම සම්බන්ධයෙන් ගොනු කර තිබු මූලික අයිතිවාසිකම් පෙත්සම් රජයේ නිතිඥයින් ඉදිරිපත් කළ මූලික විරෝධතා සැලකිල්ලට ගැනීමෙන් පවත්වා ගැනීමට ශ්‍රේෂ්ඨාධිකරණය අවසර ලබා දුන්නේ නැත. කෙසේ වුවත් 2022 මැයි මස ගාලු මුවදොර විරෝධතාකරුවන්ට පහර දීම ගැන ඉදිරිපත් කළ රිට් පෙත්සම සලකා බැලූ අභියාචනාධිකරණය පොලිස්පතිට අධිකරණය ඉදිරියේ පෙනී සිටීමට නියෝග කෙළේය. ජනාධිපති පරිශ්‍රයේ තිබී විරෝධතාකරුවන් විසින් සොයා ගන්නා ලද රුපියල් දශලක්ෂ 17.85 ක මුදල සම්බන්ධයෙන් හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂගෙන් ප්‍රකාශයක් ලබා ගන්නා බව අල්ලස් සහ දූෂණ කොමිසම අධිකරණයට දැන් වූයේය. පාර්ලිමේන්තු මංත්‍රී නාමල් රාජපක්ෂ සහ තවත් අය ඔවුන්ට එරෙහිව ඉදිරිපත් කර ඇති මුදල් විශුද්ධි කිරීමේ නඩුවලින් නිදහස් කරන මෙන් අධිකරණයෙන් ඉල්ලා සිටියහ. මැතිවරණය නොපවත්වා පළාත් පාලන ආයතන නැවත පිහිටුවන ලෙස ඉදිරිපත් කර ඇති පුද්ගලික මංත්‍රී යෝජනාව ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට පටහැනි බව නීතිපති අධිකරණයට දැන් වූයේය. දූෂණ විරෝධී පනත ඉදිරිපත් කර තිබු සංශෝධන 196ම ඇතුළත් කොට පාර්ලිමේන්තුවෙන් ඒකමතිකව සම්මත විය.   

මාධ්‍ය සහ ජනමාධ්වේදීන් මර්දනය.

කොළඹ පැවති වෘත්තීය සමිති විරෝධතාවයක් අවරණය කරමින් සිටි ජනමාධ්‍යවේදී සහ මාධ්‍ය අයිතිවාසිකම් ක්‍රියාකාරික තරිඳු උඩුවරගෙදර ට පොලිසියෙන් පහර දී අත් අඩංගුවට ගත්තේය. යූටියුබ් වාර්තාකරු සහ ජනමාධ්‍යවේදී දර්ශන හඳුන්ගොඩ කොළඹ නාරාහේන්පිට මූල්‍ය අපරාධ කොට්ඨාශයට කැඳවා තිබිණ. ඔහුව වෙනත් යූටියුබ් නාලිකාවක අත් අඩංගුවට ගෙන ඇති ප්‍රහසන ශිල්පියෙකු ගේ විවාදයට තුඩු දුන් රඟපෑමක් වෙනත් යූ ටියුබ් නාලිකාවක ප්‍රකාශ කිරීමේ සිද්ධියකට සම්බන්ධ කර තිබිණ. 2021 මැයි මස ශ්‍රී ලංකා සමුද්‍ර කලාපයේ ගිලිනු පර්ල් එක්ස්ප්‍රස් නැව සම්බන්ධයෙන් නීති පියවර ගැනීමේ ප්‍රමාදයක් සිදු කිරීම ගැන කළ ප්‍රකාශයකට අදාලව ඔහුගේ විද්‍යුත් උපකරණ පොලීසියේ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට බාර දෙන්නැයි මහෙස්ත්‍රාත් අධිකරණයෙන් නියෝග කරන ලදී. වෙනත් සිද්ධියක් සම්බන්ධයෙන් කොළඹ නගරාධිපති එම යුටියුබ් නාලිකාවෙන් තමාට අපහාස කර ඇතැයි පැමිණිල්ලක්

පැමිණිලි කර ඇත. තම කාර්යාලයට මෑතක දී නොහඳුණන පුද්ගලයන් කඩා වැදීමේ සිද්ධියක් ගැන පොලීසියට තොරතුරු ලබා දෙමින් සිටිය දී ලංකාදීප පුවත් පතේ ප්‍රාදේශීය වාර්තාකරුට ඔහුගේ කාර්යාලයේදීම නොහඳුනණ පුද්ගලයන් දෙදෙනෙකු විසින් පහර දී ඇත. 

රැස්වීමේ නිදහස මර්දනය.

1983 දෙමළ විරෝධී ජන ඝාතන කලු ජුලිය අනුස්මරණය කිරීමට පැවැත් වූ නිහඩ විරෝධතාවයක් සිංහල ජාතිවාදීන් සහ පොලිසිය විසින් කඩා කප්පල් කරන ලදී. කලු ජුලිය සිහිපත් කිරීමට පැවැත් වූ වෙනත් විරෝධතා පෙළපාලියක් පොලීසියෙන් කඳුලු ගෑස් සහ ජල ප්‍රහාර එල්ල කොට විසිරුවා හරින ලදී. ඒකාබද්ධ වෘත්තීය සමිති එකතුව යෝජිත කම්කරු නීති සංශෝධනය සහ ණය ප්‍රතිව්‍යුහගත කිරීමට විශ්‍රාමික අරමුදල් යොදා ගැනීමට එරෙහිව සංවිධානය කළ විරෝධතාවයක් පොලීසිය විසින් කඳුලු ගෑස් සහ ජල ප්‍රහාර එල්ල කොට විසිරුවා හරින ලදී. මෙම සමිතිය ඇතුළත් වෘත්තීය සමිති තුනකට එරෙහිව උසාවියෙන් නියෝග නිකුත් කෙළේය. පසුගිය මැයි මස පැවති විරෝධතාවයක දී තමා හිතුවක්කාර ලෙස අත් අඩංගුවට ගැනීම සම්බන්ධයෙන් ක්‍රියාකාරිනී මොරීන් නූර් ඉදිරිපත් කර තිබු මූලික අයිතිවාසිකම් පෙත්සම පවත්වා ගැනීමට අවසරය ලැබීමෙන් පැය කීපයකට පසු ඇය අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවා ඇත.

මර්දනකාරී නෛතික සහ ප්‍රතිපත්ති පියවර.

තම දෙපාර්තමේන්තු ප්‍රධානියාගේ අනුමැතියකින් තොරව සෞඛ්‍ය සේවකයින් මාධ්‍යයට අදහස් පළ කිරීම තහනම් කිරීමේ චක්‍රෙල්ඛයක් සෞඛ්‍ය අමාත්‍යංශයෙන් නිකුත් කෙරිණ. රටේ ළමා මන්දපෝෂණය පුදුම සහගත අනුපාතයකින් ඉහළ යන බව ප්‍රකාශ කිරීම නිසා වෛද්‍ය චමල් සංජීව ගේ වැඩ තහනම් කිරීම අනුමත කරමින් ශ්‍රේෂ්ඨාධිකරණය මෑතක ලබා දුන් නඩු තීන්දුව ගැන ද චක්‍රලේඛයේ සඳහන් කර තිබිණ. රාජ්‍ය සේවා ගණනාවක්ම අත්‍යවශ්‍ය සේවා බව ප්‍රකාශ කරන ගැසට් නිවේදනයක් නිකුත් කෙරිණ. එය වැඩ වර්ජන වැනි වෘත්තීය සමිති ක්‍රියාමාර්ග අධෛර්යට පත් කරන ප්‍රකට ක්‍රියාමාර්ගයකි. සිවිල් කටයුතුවලට වැඩියෙන් මැදිහත්වීමට හමුදාවට බලතල ලබා දීම  හේතු යුක්ති කරමින් සන්නද්ධ සේවා කැඳවීමේ ගැසට් නිවේදනයක් ජනාධිපති නිකුත් කෙළේය.

වෙනත් සිද්ධීන්.

ජ්‍යෙෂ්ඨ නිලධාරියෙකු විසින් උපදෙස් දුන් ආකාරයට ජනාධිපති නිවසේ තිබී සොයා ගත් මුදල් මහජන ආරක්ෂාවට භාර දීම ප්‍රතික්ෂේප කළ විශේෂ පොලිස් විමර්ශන ඒකකයේ අධ්‍යක්ෂකට පසුව තර්ජනය කොට පොලිස් දෙපාර්තමේන්තුවේ පර්යේෂණ සහ සංවර්ධන කොට්ඨාශයේ අධ්‍යක්ෂක වශයෙන් මාරු කරන ලදී. මෙම මාරු කිරීම පලි ගැනීමක්දැයි වෙබ් අඩවි කීපයකින් කනස්සල්ල පළ කොට තිබිණ. නාගරික සංවර්ධනය සහ නිවාස ඇමති ප්‍රසන්න රණතුංග ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ රැස්වීමක දී කතා කරමින් ඔවුන් ගේ පක්ෂයේ ආධාරකරුවන්ට හිරිහැර කරන ඕනෑම කෙනෙකුගෙන් පලි ගන්නා බවට තර්ජනය කෙළේය.

இலங்கையில் கருத்து வேறுபாடுகளை அடக்குதல், ஜூலை 2023

நிறைவேற்றுச் சாராம்சம்

சூழல்: ஓர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. Fitch மதிப்பீடுகள் இலங்கையின் வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ‘CC’இலிருந்து (கடன் அபாயத்தின் மிக உயர்ந்த மட்டங்கள்) ‘C’க்கு (தவணை தவறலுக்கு அருகில்) தரமிறக்கியது. ஊழியர்களின் பணி ஓய்வு நிதியைப் பாதிக்கும் தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கும் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயல்முறைக்கும் எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மாகாண மட்டத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.  பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவி விஜேகுணரத்ன நியமிக்கப்பட்டார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அவர் முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரிக்கான ‘விசா’வை இலங்கை நிராகரித்தது. உத்தேசமான தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் [National Unity and Reconciliation Commission (NURC)] மீது அதிருப்தியை வெளிப்படுத்தியும் அத்துடன் கடந்த காலங்களில் இதேபோன்ற உள்நாட்டுப் பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டத் தவறியதால், சர்வதேச விசாரணை செயல்முறைக்கு ஆதரவைத்தேடியும் வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் உள்ள சிவில் சமூக அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டன. முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் [Muslim Marriage and Divorce Act (MMDA)] முன்மொழியப்பட்ட முற்போக்கான திருத்தங்களை எதிர்த்து பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நீதி அமைச்சருக்கு கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்தது. மலைகத் தமிழர்களின் 200 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் கண்டன ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. 1983 ஜூலையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவாக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், போர்க் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஒரு சில அரசாங்க இராணுவத்தினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் ஹர்த்த​லொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக தமக்கு கிடைக்கப்பெற்ற 11,000 பொது முறைப்பாடுகளைக் கையாள்வதில் அது சிரமப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

விடயப் புதுப்பிப்புகள்: 2018இல், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்ட ஆறு மாத காலக்கெடுவின் முடிவில், முன்னாள் ஜனாதிபதி சிறிசேன மற்றும் ஏனையோர் மொத்த இழப்பீட்டில் 9%க்கும் குறைவாகவே கொடுப்பனவு செய்தனர், 2010இல் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு சம்பந்தமாக, 8 தொலைபேசி இலக்கங்கள் சம்பந்தமாக மேலதிக ஆதாரங்களை முன்வைப்பதற்கு நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் அனுமதியைக் கோரினார்.  அடுத்த விசாரணை செப்ரெம்பர் மாதம் நடைபெறும். பெண் நகைச்சுவைக் கலைஞர் நடாஷா எதிரிசூரியவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. சர்வதேசச் சட்டத்தின் பரந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ICCPRஇன் மிகவும் முற்போக்கான பொருள்விளக்கத்தை பிணை உத்தரவு உள்ளடக்கியிருந்தது. அண்மையில் கைது செய்யப்பட்ட பெண் நகைச்சுவைக் கலைஞரைக் கண்டித்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்த மீளாய்வு மனுவைக் கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்தது. நாடு கடத்தப்பட்ட பொலிஸ் அலுவலர் ஒருவரின் ‘விசா’ நடைமுறையில் சம்பந்தப்பட்டதற்காக ஐந்து அறியப்படாத  ஆண்களால் தான் தாக்கப்பட்டதாகவும், பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் வலியுறுத்தி சட்டத்தை அமுல்படுத்தும் அலுவலர்களிடம் பொய்யான வாக்குமூலத்தை அளித்த குற்றச்சாட்டில் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் கார்னியா பன்னிஸ்டர் ஃபிரான்சிஸூக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்னர் கலந்து கொண்ட போராட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் மாணவர் செயலார்வலர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். 2022 மே மாதம் காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான கும்பல் தாக்குதலைத் தடுக்காதது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அலுவலர் SDIG தேசபந்து தென்னக்கோனுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீதவான் இரத்துச் செய்தார். நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இவ்வருடம் செப்ரெம்பர்​ 27 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர்கள் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளைக் கருத்திற்கொண்டு, வழக்கைத் தொடர விடுப்பு வழங்க மறுத்து, பின்னர் ‘அரகலய’ அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்திற்கு வழிவகுத்த 31 மார்ச் 2022 அன்று மிரிஹான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைதுகள் அத்துடன் மே 2022இல் காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான கும்பல் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை ஆகியன மீதான இரு அடிப்படை உரிமை மனுக்களையும் மீஉயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனினும், மே 2022இல் காலிமுகப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான பேராணை மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பொலிஸ் மா அதிபரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது. ஜனாதிபதி வளாகத்தில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்தது. தமக்கு எதிரான பண சலவைசெய்தல் வழக்கில் இருந்து தம்மை விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் நான்கு சந்தேக நபர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கான உத்தேசமான தனியார் உறுப்பினர் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தெரிவித்தார். திருத்தப்பட்ட சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட 196 திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதால், ஊழல் தடுப்புச் சட்டம்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை: கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்கப் போராட்டமொன்றில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரும் மற்றும் ஊடக உரிமைச் செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவை பொலிஸார் உடல்ரீதியாக தாக்கியதுடன், கைதும் செய்தனர். கைது செய்யப்பட்ட நகைச்சுவைக் கலைஞரின் சர்ச்சைக்குரிய அரங்கேற்றத்தின் காணொளியை முதலில் வெளியிட்ட மற்றொரு ‘யூடியூப் ‘ அலைவரிசையுடன் அவரை இணைத்து, ‘யூடியூபரும்’ மற்றும் ஊடகவியலாளருமான தர்ஷன ஹந்துங்கொட, கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள நிதிக் குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். 2021 மே மாதம் இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய X-press பேர்ள் கப்பலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள ஒரு சில அலுவலர்களைக் குற்றஞ்சாட்டி ‘யூடியூப்’ காணொளியில் அவர் செய்த கூற்றொன்று தொடர்பாக அவர் தனது மின்னணு உபகரணங்களைப் பொலிஸின் CIDக்கு ஒப்படைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.  கொழும்பு மாநகர சபையின் கொழும்பு முதல்வரும் மற்றொரு சம்பவம் தொடர்பாக அதே ‘யூடியூபருக்கு’ எதிராக அவதூறு செய்ததாக முறைப்பாடொன்றைச் செய்தார். சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தனது அலுவலகத்துக்குள் புகுந்த சம்பவம் குறித்து தனது அலுவலகத்தில் வைத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கிக் கொண்டிருந்த ‘லங்காதீப’ பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாத இருவரால் தாக்கப்பட்டார்.

1983இல் நடைபெற்ற கறுப்பு ஜூலை தமிழின எதிர்ப்புப் படுகொலையை நினைவுகூரும் மௌனப் போராட்டம் சிங்களத் தேசியவாதிகளாலும் மற்றும் பொலிஸாராலும் சீர்குலைக்கப்பட்ட அதேவேளை, கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து கொழும்பில் நடைபெற்ற மற்றொரு ஆர்ப்பாட்டப் பேரணியும் பொலிஸாரினால் கலைக்கப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகையினாலும் மற்றும் நீரினாலும் தாக்குதலும் நடத்தப்பட்டது.​ உத்தேச தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மற்றும் ஊழியர்களின் பணி ஓய்வு நிதியைப் பயன்படுத்துவதைச் சம்பந்தப்படுத்தும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக, இணை தொழிற்சங்கக் கூட்டு ஒன்றினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமொன்று பொலிஸாரால் கண்ணீர்ப்புகையாலும் மற்றும் நீராலும் தாக்கப்பட்டதால் கலைக்கப்பட்டது. இது உட்பட மூன்று தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மே மாதம் ஆர்ப்பாட்டத்தின் போது தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டமை தொடர்பான அவரது அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் செயலார்வலர் மொரின் நூர் CIDக்கு அழைக்கப்பட்டார்.

அடக்குமுறைச் சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள்: சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை அதன் ஊழியர்கள் தங்கள் திணைக்களத் தலைவரின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட தடை விதித்துள்ளது. நாட்டில் குழந்தைகளின் ஊட்டச்சத்தின் அபாயகரமான விகிதங்களை வெளிப்படுத்தியதற்காக வைத்தியக் கலாநிதி சமல் சஞ்சீவவின்  இடைநிறுத்​தத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பையும் சுற்றறிக்கை குறிப்பிட்டுள்ளது. பெருமளவு பொது சேவைகளை அத்தியாவசியச் சேவைகளாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், இது தொழிலாளர் வேலைநிறுத்தம் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை ஊக்கங்கெடுப்பதற்கான அறியப்பட்ட தந்திரோபாயமாகும். சிவில் விவகாரங்களில் அதிகரித்த இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தியும் அத்துடன் அதிகாரங்களை வழங்கியும் ஜனாதிபதியினால் ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுக்கும் மாதாந்த வர்த்தமானி அறிவித்தல்     வெளியிடப்பட்டது.

ஏனைய சம்பவங்கள்: சிரேஷ்ட அலுவலரின் அறிவுறுத்தலின்படி, ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை அரசாங்கப் பாதுகாப்பிற்கு வழங்க மறுத்த பொலிஸ் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், பின்னர் பொலிஸ திணைக்களத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றம் பழிவாங்கும் ஒரு செயலா என்று பல இணையதளங்கள் தங்கள் கரிசனைகளை வெளிப்படுத்தின. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தமது கட்சி ஆதரவாளர்களைத் துன்புறுத்துபவர்கள் பழிவாங்கலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என த் தெரிவித்தார்.

Comments

Comments are closed.

Popular Posts

Login/Sign up