HR SITUATION SLRepression of Dissent

Repression of Dissent in Sri Lanka, May 2024

0

Click here to download the full report.

Executive Summary

Context: It is reported that the House Committee of the Parliament has approved the provision of duty-free vehicle import permits for Members of Parliament. The Public Financial Management Bill and the Economic Transformation Bill have been introduced to Parliament.The State Minister for Finance, Ranjith Siyambalapitiya, said in Parliament that the government has lost about 1700 Crore LKR due to the sugar tax fraud. According to budget forecasts for 2024, the defence industry will spend a substantial LKR 75 billion more on uniforms and diets than it did in 2022—a 258 per cent increase. In the 2024 edition of Reporters Without Borders’ (RSF) annual Press Freedom Index, Sri Lanka is ranked 150, a notable decline of 15 spots from 135 to 150 in comparison to 2023. The Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) recently released a report that insisted the GSL establish accountability for enforced disappearances that occurred during the armed conflict with the LTTE. In response, Sri Lanka has questioned the timing of this study as well as its mandate. After multiple human skeletons were discovered by construction workers while building a warehouse, excavation at a mass grave in Pungudutivu began. The excavation of the grave began after permission was granted from the magistrates’ courts.

Mass grave found in Pungudutivu. Photo courtesy: Tamil Guardian.

The Sub-committee on Accreditation (SCA) of the Global Alliance of National Human Rights Institutions (GANHRI) has suggested that the Human Rights Commission of Sri Lanka (HRCSL) should receive re-accreditation with an “A” status. The Election Commission has ruled out a request to take proper action regarding UNP’s National Organizer Sagala Ratnayake addressing political meetings while holding the position of Chief of Staff of the President, a staff-level official of the government. The request was made by senior journalist Lasanta Ruhunage. President Ranil Wickremesinghe declared a rise in the daily salary of plantation workers to 1700 LKR. The statement was made as part of his speech at the May Day rally of the Ceylon Workers’ Congress (CWC) at the Kotagala Public grounds.

Case Updates: A new three-member High Court bench has been named by the Chief Justice to hear the case filed against 9 members of the Army Intelligence concerning the kidnapping and disappearance of journalist Pragith Eknaligoda, which has been delayed due to occasional vacancies in the three-member High Court bench. Considering the writ application filed by the former Minister of Health, Keheliya Rambukwella, the Court of Appeal scheduled a fresh hearing to reverse the Maligakanda Magistrate’s decision to remand him over the import of subpar immunoglobulin vials. The Treasury Secretary was ordered by Maligakanda Magistrate to issue a statement to the CID with regard to why an extra 50 million USD was allocated with the approval of the cabinet to purchase medication from the private sector when 200 million USD had already been allocated under the Indian loan scheme for the purchase of medicines. Colombo Additional Magistrate ordered the CID to complete the investigation regarding the X-Press Pearl ship which caught fire off the coast of Colombo in 2021 and report the facts to the court immediately. The Gampaha High Court ordered the acquittal of four suspects, including former army Major General Aruna Deshapriya Gunawardena, in the case of the shooting death of three people and injuring approximately 50 others during a protest held by the people of Rathupaswala in Weliweriya town in 2013.

The Supreme Court decided to finalise the fundamental rights petitions filed by parties and organisations including the Samagi Jana Balawegaya demanding that the provincial government elections, which have not been held in due time, be ordered to be held immediately, over four days in front of a full bench of judges. The government has appointed the same Director General appointed by Gotabhaya Rajapaksa in 2020 to the same position of the Bribery or Corruption Investigation Commission. It was believed that under this person, the bribery and corruption fraud cases of many associated with the Rajapaksa regime were withdrawn for various reasons. Families of Disappeared in Sri Lanka allege a bid to withdraw charges against Ex-Navy Commander Wasantha Karannagoda in a court case over the disappearance of 11 males from Colombo during the war. Colombo Additional Magistrate ordered the release of former minister Marvin Silva on bail, accused of threatening and scolding a former news director of the Sri Lanka Television Corporation. The Attorney General’s Department informed the court that the Attorney General’s Department will not appear on behalf of the respondent Nilantha Jayawardena in the writ petition filed against him requesting to proceed under criminal law.

Click here to download the full report.

Repression of Freedom of Assembly: The police officers obtained a court order from the Muthur Magistrate’s Court, prohibiting any ceremony planned for the distribution of Mullivaikkakal Kanji in memory of the people who died in the last phase of the war for the coming 14 days. People protesting the government’s purported decision to grant automobile permits to legislators were reportedly approached by several police officers, creating a tense scene close to the Presidential Secretariat in Colombo. The event organized by students of Eastern University in Batticaloa to commemorate the Mullivaikkal genocide was abruptly interrupted by officers from the Eravur police station.

In Colombo, police stopped a group of Sinhala nationalists carrying lion flags from causing disturbances at a memorial ceremony honouring those who lost their lives in the war. The Police Media Division said that on May 13, they used water cannons to disperse a group of university non-academic employees who were protesting.

Repression of State Officials: Puttalam Divisional Secretary Sampath Weerasekera complained to his superiors after facing intimidation from MP Ali Sabri Raheem while he attempted to investigate an incident involving the unlawful occupation of government-owned land on the Old Mannar Road in Puttalam.

Repressive Legal and Policy Action: The Recovery of Loans by Banks (Special Provisions) (Amendment) bill which was amended to facilitate legal provisions for the suspension of Parate Law till 15 December 2024, passed in parliament without amendments. The Bill endeavours to amend the Recovery of Loans by Banks (Special Provisions) Act No 4 of 1990. It is believed the suspension of the Parate law will result in the benefit of a few large-scale businessmen who have not paid their debts. Speaker Mahinda Yapa Abeywardena informed the Parliament that the President issued a special order to call the armed forces for the security of the country. By the powers vested in terms of section 2 of the Essential Public Services Act, President Ranil Wickremesinghe ordered all services connected to the supply of electricity and the supply or distribution of petroleum products and fuel to be essential.

Other: Under the Online Safety Act, Colombo Chief Magistrate issued a conditional order prohibiting a YouTube channel from disseminating and publishing any derogatory content about Lieutenant General Vikum Liyanage, the commander of the Army. On the 6th, lawyer Sadaru Kumarasinghe was summoned to the airport police for expressing his views against the assignment of issuing visas and charging money to the Indian Global VFS company at the BIA. State Finance Minister Shehan Semasinghe received a threat of being killed and set on fire, and subsequently, Fort police opened an investigation into the threat. UNP General Secretary Palitha Range Bandara said on the 28th that it has become an essential matter to pass a resolution in Parliament postponing the election for another two years.  Election monitoring body PAFFREL wrote a letter to the Election Commission questioning the decision taken by the Ranil Wickremesinghe government to distribute nearly 15 billion rupees through informal and political mechanisms for rapid development activities. The accused chairman of the Cricket Board, who has illegally suspended the complainant’s service, has illegally and arbitrarily initiated a disciplinary inquiry against the complainant, who revealed in a press conference that there is corruption and irregularities in the Cricket Board.

Click here to download the full report.

ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය, 2024 මැයි

විධායක සාරාංශය

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.

සන්දර්භය: පාර්ලිමේන්තු මංත්‍රීන්ට තීරුබදු රහිත වාහන ආනයන බලපත්‍ර ලබා දීමට පාර්ලිමේන්තුවේ ගෘහ කාරක සභාව අනුමත කළ බව වාර්තා විය. රාජ්‍ය මූල්‍ය කළමනාකරණ පනත සහ ආර්ථික පරිවර්තන පනත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කෙරිණ. සීනි බදු වංචාව නිසා ආණ්ඩුවට රු. කෝටි 1700 ක් පමණ අහිමි වූ බව මුදල් රාජ්‍ය ඇමති රංජිත් සියඹලාපිටිය පාර්ලිම්න්තුවේ දී ප්‍රකාශ කෙළේය. 2024 වසර සඳහා ඉදිරිපත් කර ඇති අයවැය ඇස්තමේන්තු අනුව ආරක්ෂක අංශ නිල ඇඳුම් සහ ආහාර සඳහා රු. බිලියන 75ක් වැය කරනු ඇත. එය 2022 වසර හා සසඳන විට සියයට 258ක වැඩි වීමකි.

දේශසීමා රහිත වර්තාකරණය සංවිධානයේ ( Reporters Without Borders) 2024 වාර්ෂික පුවත් පත් නිදහස පිළිබඳ දර්ශකය අනුව ශ්‍රී ලාකාව ශ්‍රේණි ගත වූයේ 150ක් වශයෙනි. එය 2023 දී රටවල් 150කින් හිමි වූ 135 ස්ථානයෙන් ස්ථාන 15ක පසු බැසීමකි.

මානව අයිතිවාසිකම් පිළිබඳ එක්සත් ජාතින්ගේ මහකොමසාරිස් කාර්යාලය මෑතක දී නිකුත් කළ වාර්තාවකින් එල්ටිටීඊ යුද ගැටුම් පැවති සමයේ සිදු වු බලහත්කාර අතුරුදහන් කිරීම් පිළිබඳ වගවීම ස්ථාපිත කරන මෙන් ලංකාණ්ඩුවෙන් ඉල්ලා සිටියේය. ශ්‍රී ලංකාව ඊට ප්‍රතිචාර වශයෙන් මෙම අධ්‍යයනය කරන ලද කාල සීමාව සහ එහි මැන්ඩේට් බලය ප්‍රශ්න කෙළේය.

ගබඩාවක් සඳහා ඉදි කිරීමේ කටයුතුවල යෙදී සිටි කම්කරුවන් මිනිස් ඇටසැකිලි ගණනාවක් සොයා ගැනීමත් සමග පුන්ගුඩුතිවු සමූහ මිනී වළක කැනීම් කටයුතු ආරම්භ විය. කැනීම් කටයුතු ආරම්භ වූයේ මහෙස්ත්‍රාත් අධිකරණයෙන් අවසරය ලබා ගැනීමෙන් පසුවය.

පුන්ගුඩුතිවු හි සොයා ගත් සමූහ මිනි වළ ඡායාරූප අනුග්‍රහය ටැමිල් ගාර්ඩියන්.

ජාතික මානව අයිතිවාසිකම් ආයතන පිළිබඳ ගෝලීය සංවිධානයේ ප්‍රතීතනය පිළිබඳ අනු කාරක සභාව ශ්‍රී ලංකාවේ මානව හිමිනම් කොමිසම නැවත A ශ්‍රෙණියේ ආයතනයක් ලෙස ප්‍රතීතනය කළ යුතුයැයි යෝජනා කර ඇත.

එක්සත් ජාතික පක්ෂයේ ජාතික සංවිධායක සාගල රත්නායක ආණ්ඩුවේ මාණ්ඩලික ශ්‍රේණියේ තනතුරක් වන ජනාධිපති කාර්ය මණ්ඩල ප්‍රධානි තනතුර දරමින් දේශපාලන රැස්වීම් ඇමතීම සම්බන්දයෙන් නිසි පියවර ගන්නැයි මැතිවරණ කොමිසමෙන් තරන ලද ඉල්ලීම එම කොමිසමෙන් ප්‍රතික්ෂේප කෙරිණ. එම ඉල්ලීම කරන ලද්දේ ජනමාධ්‍ය වේදී ලසන්ත රුහුණගේ විසිනි.

ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ වතු කම්කරුවන්ගේ දෛනික වැටුප රු. 1700 දක්වා වැඩි කරන බව ප්‍රකාශ කෙළේය. මෙම ප්‍රකාශය කරන ලද්දේ කොටගල මහජන ක්‍රීඩාංගනයේ පැවති ලංකා වතු කම්කරු කෝංග්‍රසයේ මැයි දින රැලිය අමතමිනි.

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.

නඩු යාවත්කාලින කිරීම්: අගවිනිසුරු ත්‍රිපුද්ගල මහාධිකරණ විනිසුරු මණ්ඩලයේ ඇබෑර්තුවක් නිසා ප්‍රමාද වී තිබුණ ජනමාධ්‍යවේදී ප්‍රගීත් එක්නැලිගොඩ පැහැරගෙන යෑම සහ අතුරුදහන් කිරීම සම්බන්ධයෙන් හමුදා බුද්ධි අංශයේ සාමාජිකයන් නම දෙනෙකුට එරෙහිව පවරා තිබු නඩුව විභාග කිරීම සඳහා ත්‍රිපුද්ගල මහාධිකරණ විනිසුරු මණ්ඩලයක් පත් කෙළේය.

තත්වයෙන් බාල ඉමුයොනොග්ලෝබියුලින් ඖෂධය ආනායනය කිරීම සම්බන්ධයෙන් හිටපු සෞඛ්‍ය ඇමති කෙහෙලිය රඹුක්වැල්ල රක්ෂිත බන්ධනාගාර ගත කිරීමට මාලිගාකන්ද මහෙස්ත්‍රාත් දුන් තින්දුව වෙනස් කිරීමට ගොනු කර තිබු රිට් අයැදුම් පත්‍රය විභාගයට ගැනීමට අභියාචනාධිකරණය අලුතින් දින නියම කෙරිණ.

ඉන්දියානු ණය යෝජනා ක්‍රමය යටතේ ඹෟෂධ මිලදී ගැනීම සඳහා ඇමරිකානු ඩොලර් දශ ලක්ෂ 200ක් වෙන් කර තිබියදී පෞද්ගලික අංශයෙන් ඹෟෂධ මිලදි ගැනීම සඳහා ඇමරිකානු ඩොලර් දශ ලක්ෂ 50 ක් වෙන් කිරීමට කැබිනට් අනුමැතිය ලබා ගත්තේ ඇයි ද යන්න පිළිබඳව අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට ප්‍රකාශයක් ලබා දීමට භාණ්ඩාගාරයේ ලේකම්ට මාලිගාකන්ද මහෙස්ත්‍රාත් නියෝග කෙළේය.

2021 දී කොළඹ වෙරළට ඔබ්බෙන් ගිනි ගත් එක්ස්ප්‍රස් පර්ල් නැව සම්බන්ධයෙන් කෙරෙන විමර්ශන කටයුතු සම්පූර්ණ කොට වහාම අධිකරණයට ඉදිරිපත් කරන ලෙස කොළඹ අතිරේක මහෙස්ත්‍රාත් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට නියෝග කෙළේය.

ගම්පහ මහාධිකරණය 2013 දී වැලිවේරිය රතුපස්වෙල පැවති විරෝධතාවයක දී වෙඩි තබා පුද්ගලයන් තිදෙනෙකු ඝාතනය කිරීම සහ තවත් 50කට ආසන්න සංඛ්‍යාවකට තුවාල සිදු කිරීම සම්බන්ධයෙන් හමුදවේ විශ්‍රාමික මේජර් ජනරාල් අරුණ දේශප්‍රිය සහ තවත් සැකකරුවන් සිවු දෙනෙකුට එරෙහිව ගොනු කර තිබු නඩුවෙන් ඔවුන් නිදහස් කෙරිණ.

නියමිත කාලයේ දී නොපවත්වන ලද පළාත් පාලන ඡන්ද විමසීම් වහාම පැවැත්වීමට නියෝග කරන මෙන් ඉල්ලා සමගි ජනබල වේගය ඇතුළත් පක්ෂ සහ සංවිධාන ගණනාවක් ගොනු කර තිබු මූලික අයිතිවාසිකම් පෙත්සම් පූර්ණ විනිසුරු මණ්ඩලයක් ඉදිරියේ දින හතරක් තුළ පවත්වා අවසන් කිරීමට ශ්‍රේෂ්ඨාධිකරණය තීරණය කෙළේය.

අල්ලස් සහ දූෂණ විමර්ශන කොමිසමේ අධ්‍යක්ෂ ජනරාල් තනතුරට පත් කිරීමට ගෝඨාභය රාජපක්ෂ 2020 දී තීරණය කළ පුද්ගලයා ම නැවත වරක් එම තනතුරට පත් කිරීමට ආණ්ඩුව තීරණය කෙළේය. මොහු එම තනතුරේ සිටිය දී රාජපක්ෂ පාලනයත් සමග සම්බන්ධතා පැවැත් වූ අය ගේ අල්ලස් හෝ දූෂණ හා වංචා පරීක්ෂණ ගණනාවක්ම නොයෙකුත් හේතූන් මත ඉල්ලා අස් කර ගත් බව පැවසේ.

යුද සමයේ කොළඹ දී තරුණයින් 11ක් පැහැර ගෙන යෑම පිළිබඳව හිටපු නාවික හමුදාපති වසන්ත කරන්නාගොඩ ට එරෙහිව ගොනු කර ඇති නඩුව ඉල්ලා අස්කර ගැනීමේ උත්සාහයක් පවතින්නේයැයි ශ්‍රී ලංකාවේ අතුරුදහන් වූවන්ගේ පවුල්වල සංවිධානය චෝදනා කෙළේය.

ශ්‍රී ලංකා රූපවාහිනි සංස්ථාවේ හිටපු ප්‍රවෘත්ති අධ්‍යක්ෂ ට බැණ වැදී තර්ජනය කිරීම සම්බන්ධයෙන් චෝදනා ලැබ සිටින හිටපු ඇමති මර්වින් සිල්වා ඇප මත නිදහස් කිරීමට කොළඹ අතිරේක මහෙස්ත්‍රාත් නියෝග කෙළේය.

නිලන්ත ජයර්ධනට අපරාධ විධි විධාන යටතේ චෝදනා ගොනු කරන ලෙස ඉල්ලා ඉදිරිපත් කර ඇති රිට් පෙත්සම සම්බන්ධයෙන් වගඋත්තරකරු වෙනුවෙන් නීතිපති දෙපාර්තමේන්තුව ඉදිරිපත් නොවන බව නීතිපති අධිකරණයට දැනුම් දුන්නේය.

රැස්වීමේ නිදහස මර්දනය: ඉදිරි දින 14 තුළ යුද්ධයේ අවසාන අදියරේ දී මිය ගිය අය සිහිපත් කිරීම සඳහා මුල්ලිවයික්කාල් හි කන්ජි බෙදා දීමට සැලසුම් කරන ඕනෑම උත්සවයක් තහනම් කිරීමේ නියෝගයක් පොලිසිය මූතූර් මහෙස්ත්‍රාත් අධිකරණයෙන් ලබා ගත්තේය.  

මංත්‍රීන්ට තීරු බදු රහිත වාහන ආනයනයට බලපත්‍ර ලබා දීමට ආණ්ඩුව ගෙන ඇතැයි කියන තීරණයට විරෝධය පෑමට කොළඹ ජනාධිපති ලේකම් කාර්යාලය ඉදිරි පිට රැස් වූ ජනතාව පොලීසියෙන් වටලා ගැනීම නිසා උණුසුම් තත්වයක් ඇති විය.

මුල්ලිවයික්කාල් ජනඝාතනය අනුස්මරණය කිරීමට මඩකලපුව නැගෙනහිර විශ්වවිද්‍යාලයේ සිසුන් සංවිධානය කළ උත්සවයක් එරාවුර් පොලීසිය මැදිහත් වීමෙන් කඩා කප්පල් කරන ලදී.

යුද්ධයෙන් මිය ගිය අය අනුස්මරණය කිරීම සඳහා කොළඹ සංවිධානය කළ උත්සවයකට බාධා පැමිණෙන ආකාරයෙන් සිංහ කොඩි රැගෙන ගමන් කළ සිංහල අන්තවාදි කණ්ඩායමක් පොලීසිය මැදිහත්ව නතර කරන ලදී.

විරෝධතා දැක් වූ විශ්වවිද්‍යාල අනධ්‍යයන කාර්ය මණ්ඩල සේවක පිරිසක් විසිරුවා හැරීමට පොලිසිය ජල ප්‍රහාර එල්ල කළ බව පොලිස් මාධ්‍ය අංශය පැවසීය.  

රාජ්‍ය නිලධාරීන් මර්දනය: පුත්තලමේ පරණ මන්නාරම් පාරේ රජයේ ඉඩමක් අනවසරයෙන් අත්පත් කර ගැනිමක් පිළිබඳව විමර්ශනයක් කිරීමේ දී තමාට පාර්ලිමේන්තු මංත්‍රී අලි සබ්රි තර්ජනය කළ බව පුත්තලම ප්‍රාදේශීය ලේකම් සම්පත් වීරසේකර තම උසස් නිලධරීන්ට දැනුම් දුන්නේය.

මර්දනකාරී නිති සහ ප්‍රතිපත්ති පියවර: 2024 දෙසැම්බර් 15 තෙක් පැරේටේ නීතිය අත්හිටුවීමට නීතිමය ප්‍රතිපාදන පහසු කිරීම සඳහා සංශෝධනය කළ බැංකු ණය ආපසු අයකර ගැනීමේ (විශේෂ ප්‍රතිපාදන) (සංශෝධන) පනත පාර්ලිමේන්තුවෙන් සංශෝධන රහිතව සම්මත කෙරිණ. එම පනතේ අරමුණ වූයේ 1990 අංක 4 දරණ බැංකු ණය ආපසු අය කර ගැනීමේ (විශේෂ ප්‍රතිපාදන) පනත සංශෝධනය කිරීම ය. පැරේටේ නීතිය අත්හිටුවීමෙන් ණය ආපසු ගෙවා නැති මහා ව්‍යාපාරිකයන් කීප දෙනෙකුට වාසියක් අත්වේයැයි පැවසේ.

රටේ ආරක්ෂාව තහවුරු කිරීම සඳහා සන්නද්ධ සේවා කැඳවීමේ නියෝගයක් ජනාධිපති නිකුත් කර ඇති බව කතානායක මහින්ද යාපා අබේවර්ධන පාර්ලිමේන්තුවට දැනුම් දුන්නේය.

විදුලිය සැපයීම සහ පෙට්‍රෝලියම් නිෂ්පාදන සහ ඉන්ධන සැපයීම සහ බෙදාහැරීම සම්බන්ධ සියලු සේවා අත්‍යවශ්‍ය මහජන සේවා පනතේ 2 ඡේදය යටතේ තමාට පැවරී ඇති බලතල යටතේ අත්‍යවශ්‍ය සේවා සේ නියෝග කරන බව ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ ප්‍රකාශයට පත් කෙළේය.

වෙනත්: යූ ටියුබ් නාලිකාවකට හමුදාපති ලුතිනන් ජනරාල් විකුම් ලියනගේ පිළිබඳව කිසියම් අපහාසාත්මක ප්‍රකාශයක් පළ කිරීම සහ බෙදා හැරීම කොන්දේසි සහිතව තහනම් කිරීමේ නියෝගයක් කොළඹ ප්‍රධාන මහෙස්ත්‍රාත් මාර්ගගත ආරක්ෂාව පිළිබඳ පනත යටතේ නිකුත් කෙළේය.

6 වැනි දා බණ්ඩාරනායක අන්තර්ජාතික ගුවන් තොටුපොළේ දී ඉන්දියානු ග්ලෝබල් VFS සමාගම ට වීසා නිකුත් කිරීම සහ මුදල් අය කිරීම පැවරීම ගැන තම අදහස් ප්‍රකාශ කිරීම සම්බන්ධයෙන් කිතිඥ සඳරු සේමසිංහ ගුවන් තොටුපොළ පොලීසියට කැඳවූයේය.

මුදල් රාජ්‍ය අමාත්‍ය ෂෙහාන් සේමසිංහ මරා පුළුස්සන බවට ලැබී ඇති තර්ජනය පිළිබඳව විමර්ශනයක් කොටුව පොලිසියෙන් ආරම්භ කර ඇත.

ඡන්ද විමසීම් තවත් වසර දෙකකට කල් දැමීමට යෝජනාවක් පාර්ලිමේන්තුවෙන් සම්මත කර ගැනීම අත්‍යවශ්‍ය කරුණක් බවට පත්ව ඇතැයි එක්සත් ජාතික පක්ෂයේ මහ ලේකම් පාලිත රංගේ 28 වැනි දා ප්‍රකාශ කෙළේය.

හදිසි සංවර්ධන කටයුතු සඳහා නොවිධිමත් සහ දේශපාලන යාන්ත්‍රණ තුළින් රුපියල බිලියන 15කට ආසන්න මුදලක් බෙදා හැරීමට රනිල් වික්‍රමසිංහ ආණ්ඩුව ගෙන ඇති තිරණය ප්‍රශ්න කරමින් මැතිවරණ නිරීක්ෂණ ආයතනයක් වන පැප්රල් මැතිවරණ කොමිසමට ලිපියක් යවා ඇත

ක්‍රිකට් පාලක මණ්ඩලයේ දූෂණය සහ අක්‍රමිකතා පවතින බවට පුවත් සාකච්ඡාවක දී කරුණු හෙළිදරවු කළ පැමිණිලිකරුගේ සේවය අනීතිකව අත්හිටුවා අනීතිකව සහ හිතුවක්කාර විනය පරීක්ෂණයක් ආරම්භ කර ඇතැයි එම පුද්ගලයා ක්‍රිකට් පාලක මණ්ඩලයේ සභාපතිට චෝදනා එල්ල කෙළේය.

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රිසි භාෂාවෙන් බාගත කිරීමට මෙතන ක්ලික් කරන්න.

இலங்கையில் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், மே 2024

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

நிறைவேற்றுச் சாராம்சம்

சூழல்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தின் சபைக் குழு அனுமதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொது நிதிநிலை முகாமைத்துவச் சட்டமூலம் மற்றும் பொருளாதார உருமாற்றச் சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சீனி வரி மோசடியால் அரசாங்கம் 1,700 கோடி ரூபாவை இழந்துவிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2024க்கான வரவு-செலவுத் திட்டத்தின் கணிப்புகளின்படி, பாதுகாப்புத்  தொழிற்றுறை 2022இல் இருந்ததை விட சீருடைகள் மற்றும் உணவுகள்  ஆகியவற்றில் கணிசமானளவு  அதாவது ரூ. 75 பில்லியன் கூடுதலாகச் செலவழிக்கும்  – இது 258 சதவீத அதிகரிப்பாகும்.

எல்லைகளற்ற நிருபர்கள் [Reporters Without Borders’ (RSF)] வருடாந்த பத்திரிகைச் சுதந்திர சுட்டெண்ணின் 2024 பதிப்பில், இலங்கை 150ஆவது இடத்தில் உள்ளது. இது 2023உடன் ஒப்பிடுகையில், 135இலிருந்து 150க்கு என 15 இடங்களின் குறிப்பிடத்தக்க சரிவாகும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று, விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின் போது இடம்பெற்ற பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த ஆய்வின் கால விதிப்பு மற்றும் அதன் ஆணை ஆகியன குறித்து  இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.

பண்டகசாலை ஒன்றை நிர்மாணிக்கும் போது, கட்டுமானத் தொழிலாளர்களால் பல மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, புங்குடுதீவில் உள்ள பாரிய புதைகுழியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நீதவான் நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, புதைகுழி தோண்டும் பணி தொடங்கியது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு [Human Rights Commission of Sri Lanka (HRCSL)] “A” அந்தஸ்துடன் மீள்- அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் [Global Alliance of National Human Rights Institutions (GANHRI)] அங்கீகாரம் மீதான துணைக்குழு [Sub-committee on Accreditation (SCA)]  பரிந்துரைத்துள்ளது.

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

அரசாங்கத்தின் ஓரு பணியாளர் மட்டத்திலான அதிகாரியான ஜனாதிபதியின் பணிப் பிரதானி பதவியை வகித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, அரசியல் கூட்டங்களில் உரையாற்றியமை தொடர்பில் உரிய நடவடிக்கையொன்றை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த ருஹுனகேவினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தியுள்ளார். கொட்டகலை பொது மைதானத்தில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) மே தினக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாக இந்தக் கூற்று வெளியிடப்பட்டது.

விடயப் புதுப்பிப்புகள்: ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட கடத்தப்பட்டு, காணாமல் போனது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக புதிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற மன்றாயம் பிரதம நீதியரசரால் பெயரிடப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற மன்றாயத்தில் அவ்வப்போது காலியிடங்கள் இருப்பதால் விசாரணை தாமதமாகி வந்தது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த எழுத்தாணை மனுவைப் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சப்பார் இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றின் தீர்ப்பை மாற்றியமைக்கும் வகையில் புதிய விசாரணையை நடத்த திட்டமிட்டுள்ளது.

மருந்துகளின் கொள்வனவுகளுக்கான இந்திய கடன் திட்டத்தின் கீழ், ஏற்கனவே 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ள போது, தனியார் துறையிடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஏன் மேலதிகமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டன என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் வழங்குமாறு திறைசேரிச் செயலாளருக்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2021இல், கொழும்பு கடற்பகுதியில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து, உடனடியாக நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கையிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2013இல், வெலிவேரிய நகரில் இரத்துபஸ்வல மக்கள் நடத்திய போராட்டத்தின் போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் சுமார் 50 பேர் காயமடைந்தமை தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் அருண தேசப்பிரிய குணவர்தன உட்பட நான்கு சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நான்கு நாட்களுக்கும் மேலாக, முழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், சமகி ஜன பலவேகய உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஆகியன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை இறுதி செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. காலதாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என இந்த மனுக்கள் கோருகின்றன.

2020இல், கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அதே பணிப்பாளர் நாயகத்தையே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதே பதவிக்கு அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த நபரின் கீழ் ராஜபக்ச ஆட்சியுடன் தொடர்புடைய பலரின் இலஞ்ச மற்றும் ஊழல் மோசடி வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காக மீளப்பெறப்பட்டதாக நம்பப்பட்டது.

இலங்கையில் போரின் போது, கொழும்பில் இருந்து 11 ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை மீளப்பெற முயற்சிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இலங்கை தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செய்தி பணிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியதாககவும்,  திட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் தொடருமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவில் பிரதிவாதி நிலாந்த ஜயவர்தனவின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாக மாட்டாது என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

ஒன்று கூடும் சுதந்திரத்தை ஒடுக்குதல்: இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கிடும் நிகழ்வினை எதிர்வரும் 14 நாட்களுக்கு நடத்தக்கூடாது என மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் உத்தேசிக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், பல பொலிஸ் உத்தியோகத்தர்களால் அணுகப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதட்டமான காட்சியொன்றை உருவாக்கியது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஏறாவூர் பொலிஸ் நிலைய அலுவலர்களினால் திடீரென இடைநிறுத்தப்பட்டது.

கொழும்பில், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சிங்கக் கொடிகளை ஏந்திய சிங்கள தேசியவாதிகளைக் கொண்ட குழுவொன்று குழப்பம் விளைவிப்பதைப் பொலிஸார்  தடுத்து நிறுத்தினர்.

மே 13 அன்று, போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட குழுவொன்றைக் கலைப்பதற்கு நீர்த்தாரைப் பிரயோகத்தைத் தாம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகளின் அடக்குமுறை: புத்தளம் பழைய மன்னார் வீதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தமை தொடர்பிலான சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முற்பட்ட போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட புத்தளம் பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர தனது மேலதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அடக்குமுறை சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கை: 15 டிசம்பர் 2024 வரை பராட் சட்டத்தை இடைநிறுத்துவதற்கான சட்ட விதிகளை எளிதாக்கும் வகையில் திருத்தப்பட்ட வங்கிகள் மூலம் கடன்களை மீளப் பெறுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலமானது  திருத்தங்கள் இன்றி ​ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் 1990இன் வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்)  சட்ட இல. 4இன் மூலம் கடன்களை திரும்பப் பெறுவதைத் திருத்த முயற்சிக்கிறது. பராட் சட்டம் இடைநிறுத்தப்பட்டதன் மூலம் கடனைச் செலுத்தாத ஒரு சில பெரிய அளவிலான வணிகர்களுக்கு நன்மை ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலிய உற்பத்திப்பொருட்களினதும் மற்றும் எரிபொருளினதும் விநியோகம் அல்லது பங்கீடு ஆகியன தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசியமானதாக இருக்க வேண்டும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஏனையவை: நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ், கொழும்பு பிரதான நீதவான், இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவைப் பற்றி எந்த விதமான தரக்குறைவான உள்ளடக்கத்தைப் பரப்புவதையும் அத்துடன் வெளியிடுவதையும் யூ டியூப் அலைவரிசைக்குத் தடைசெய்து நிபந்தனையுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்திய குளோபல் VFS நிறுவனத்திற்கு BIAஇல் விசா வழங்குவதற்கும் அத்துடன் பணம் அறவிடுவதற்கும் எதிராகக் கருத்து தெரிவித்ததற்காக சட்டத்தரணி சதரு குமாரசிங்க 6 அன்று விமான நிலைய பொலிஸூக்கு வரவழைக்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவார் என அரச நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு அச்சுறுத்தலொன்று விடுக்கப்பட்டதையடுத்து, அச்சுறுத்தல் தொடர்பில் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேர்தலை இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது அத்தியாவசியமான விடயமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார 28 அன்று தெரிவித்தார்.

துரித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முறைசாரா மற்றும் அரசியல் பொறிமுறைகள் ஊடாக கிட்டத்தட்ட 15 பில்லியன் ரூபாவை விநியோகிக்க ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் கேள்வி எழுப்பி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு, கடிதம் ஒன்றைத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான PAFFREL எழுதியுள்ளது.

முறைப்பாட்டாளரின் சேவையை சட்டவிரோதமாக இடைநிறுத்தியதாக்க குற்றஞ்சாட்டப்பட்ட கிரிக்கெட் சபைத் தலைவர், கிரிக்கெட் சபையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்திய முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்டவிரோதமாகவும் அத்துடன் தன்னிச்சையாகவும் ஒழுக்காற்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Comments

Comments are closed.

Popular Posts

Login/Sign up