Repression of Dissent

Repression of Dissent in Sri Lanka [OCT– DEC 2018]

0

DOWNLOAD FULL REPORT: ENGLISH | SINHALA | TAMIL |

This report provides general trends and details of some significant incidents reported in relation to repression of dissent in Sri Lanka from October to December 2018. Executive summary describes context and analyses the trends and key findings. The summaries of the 28 reported incidents with sources are mentioned in the main section, under 4 categories. Media reports, incidents reported to INFORM, observations and experience of INFORM staff have served as sources of information to the report.

This three month period saw an unprecedented constitutional coup in Sri Lanka. On the night of 26th October, President Sirisena sacked Ranil Wickramasinghe, the Prime Minister with whom he had been in an uneasy coalition government for nearly four years; and appointed his former political ally turned foe, the former President he defeated in January 2015 presidential polls, Mahinda Rajapaksha, as the Prime Minister. The President also prorogued parliament and later dissolved it, and appointed new Ministers. Except the proroguing of parliament, all these were deemed unconstitutional. The majority in parliament repeatedly passed no confidence motions in parliament against the Rajapaksha amidst physical and verbal attacks against the speaker in parliament. Violent behavior of MPs supportive of Rajapaksha in the parliament led to MPs and policemen being injured. There were protests across the island for democracy, constitution and rule of law. The Court of Appeal issued interim orders stopping Rajapaksha from functioning as the Prime Minister and the end of the 50 day stalemate came when the Supreme Court determined that dissolution of parliament was unconstitutional, leading to the President being compelled to re-appoint Ranil Wickramasinghe as the Prime Minister.  The crisis had led to political and economic uncertainty, with the scheduled budget reading in November being indefinitely postponed. The prospect of Rajapaksha returning to power led to widespread fears of even the limited reforms being stalled and more severe crackdown on dissent than had been seen under the Sirisena – Wickramasinghe government.

Within hours of Rajapaksha being appointed as the Prime Minister, there were threats to media freedom, and the relative independence displayed in the last four years by state media institutions was eroded. Key editors lost control on editorial policies as unions loyal to Rajapaksha took control of state media institutions. Later on, media was barred from significant political events. A prominent civil society activist opposing the coup was subjected to investigations based on comments he had made at a press conference, and the President had also made negative references to him and NGOs. The President also had made comments discrediting the Lesbian – Gay – Bisexual – Transgender – Intersex – Queer (LGBTIQ) community, referring to United National Front (UNF) government as one run by butterflies, butterflies being a term used to discredit the LGBTIQ community.

Before and after the coup, the Northern and Eastern Province continued to be heavily militarized, and long standing protests on disappearances and land continued.  November was particularly significant, as some Tamils in North and East engaged in commemorating fallen LTTE cadres, after weeks of preparations to restore to extent possible, the cemeteries bulldozed by the military. It is mostly in this context that several Tamil activists and politicians faced obstructions, threats, intimidation and surveillance than in other parts of the country during this period. Two activists were also summoned for questing by the Terrorist Investigation Division (TID) of the Police, with reasons not being so clear. In the East, police had compelled the wife of a Tamil detainee to give up a hunger strike.

There were also several violations of freedom of expression in different forms during this period in different parts of the country. A Tamil journalist who had been subjected to harassments and intimidations in previous months, had his brother and friends summoned by the TID, some journalists were attacked by Navy personnel in civil clothes outside a court premises and media watchdog claimed a foreign correspondent was bullied. A film that was critical of the LTTE was pulled out after being publicly listed, at the Jaffna international film festival. A photographic exhibition featuring human rights issues was not allowed to be held in the Peradeniya University by some students. A journalist who has been consistently writing about a prison massacre, reported threats from suspects in the case, including a police officer who had been arrested, remanded and released on bail.

In the same university, and also at the Wayamba University, anti-ragging students had faced intimidation and threats from other students. At the height of the coup, and in context of arrest of country’s highest ranking serving military official in relation to an abduction case, a top police investigator was transferred (and subsequently reinstated due to widespread pressure), allegedly due to instructions from the President and pressure from the same military official who was being investigated by the said investigator. Tamil students demanding release of Tamil political prisoners were threatened by some Sinhalese men. Police had also been accused of firing tear gas at people protesting about alleged death in custody.

ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය ඔක්තෝබර් – දෙසැම්බර්

මේ වාර්තාව ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය සම්බන්ධයෙන් 2018 ඔක්තෝබර් සිට දෙසැම්බර් දක්වා කාලයේ වාර්තා වූ ප්‍රධාන සිදුවීම් සම්බන්ධ විස්තර සහ සාමාන්‍ය ප්‍රවණතා ඉදිරිපත් කරයි. විධායක සාරාංශය තුළින් සන්දර්භය සහ මූලික සොයා ගැනීම් විස්තර කෙරේ. ප්‍රධාන කොටසේ, කාණ්ඩ 4ක් යටතේ වාර්තා වූ සිද්ධි 28ක් සම්බන්ධයෙන් සාරාංශගත තොරතුරු මූලාශ්‍ර සමග සඳහන් කර ඇත. මාධ්‍ය වාර්තා, ඉන්ෆෝම් වෙත වාර්තා වූ සිදුවීම්, ඉන්ෆෝම් කාර්ය මණ්ඩලයේ අත්දැකීම් මේ වාර්තාවේ තොරතුරු මූලාශ්‍ර වේ.

මේ මාස තුන ඇතුළත, මීට පෙර ශ්‍රී ලංකාවේ සිදු නොවූ ව්‍යවස්ථාමය කුමන්ත්‍රණයක් දක්නට ලැබුනි. ඔක්තෝබර් 26 වැනි දින රාත්‍රියේ, ජනාධිපති සිරිසේන විසින්, ඔහු සමග වසර 4ක් තිස්සේ අපහසු සන්ධානගත රජයක් ගෙන යමින් සිටි, අගමැති රනිල් වික්‍රමසිංහ ධූරයෙන් ඉවත් කළ අතර, සිරිසේනගේ දේශපාලනික සතුරෙක් බවට පත්ව සිටි, පෙර දේශපාලන සගයෙක් වූ, 2015 ජනවාරි පැවැති ජනපතිවරණයේ දී ඔහු විසින් පරාජය කරන ලද, හිටපු ජනපති මහින්ද රාජපක්ෂ නව අගමැතිවරයා ලෙස පත් කරන ලදී.   ජනාධිපති විසින් පාර්ලිමේන්තුවේ වාර අවසන් කිරීම සිදු කළ අතර, පසුව එය විසුරුවා හරින ලදී. ඒ අතර නව අමාත්‍ය මණ්ඩලයක් ද පත් කරන ලදී. පාර්ලිමේන්තුවේ වාර අවසන් කිරීම හැරුණු කළ, මේ සියල්ල ව්‍යවස්ථාවට පටහැනි විය. පාර්ලිමේන්තුවේ බහුතරයක් විසින් රාජපක්ෂට එරෙහිව විශ්වාස භංග යෝජනා නැවත නැවතත් සම්මත කළ අතර, පාර්ලිමේන්තු කතානායකට එරෙහිව කායික සහ වාග් ප්‍රහාර ද එල්ල විය. රාජපක්ෂ පහතාට පක්ෂ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ගේ ප්‍රචණ්ඩ හැසිරීම විසින් අනෙකුත් මන්ත්‍රීවරුන්ට සහ පොලිස් නිලධාරීන්ට තුවාල සිදු කරන ලදී. ප්‍රජාතන්ත්‍රවාදය, ව්‍යවස්ථාව සහ නීතියේ ආධිපත්‍යය ඉල්ලමින් රට පුරා උද්ඝෝෂණ පැවැත්වුනි. මේ අතර අභියාචනාධිකරණය විසින් රාජපක්ෂ අගමැතිවරයා ලෙස කටයුතු කිරීම වළක්වමින් අතුරු තහනම් නියෝගයක් නිකුත් කළ අතර, දින 50ක අස්ථාවරභාවය ශ්‍රේෂ්ඨාධිකරණය විසින් පාර්ලිමේන්තුව විසුරුවා හැරීම ව්‍යවස්ථා විරෝධී බව තීරණය කිරීමත් සමග අවසන් විය. මේ හේතුවෙන් ජනපතිවරයාට නැවතත් රනිල් වික්‍රමසිංහ අගමැති ලෙස පත් කිරීමට සිදු විය. අර්බුදය නිසා දේශපාලනික හා ආර්ථික අස්ථාවරභාවයක් ඇති වූ අතර, නොවැම්බර් මාසයේ සැලසුම් කර තිබූ අයවැය කියවීම දින නියමයක් රහිතව කල් තබන ලදී. රාජපක්ෂ නැවත බලයට පැමිණීම යන්නත් සමග, සිරිසේන-වික්‍රමසිංහ පාලනය යටතේ සීමිත ප්‍රතිසංස්කරණ ප්‍රමාණයක් ඇති කර තිබුන ද, ඊට වඩා දරුණු මට්ටමේ විසම්මුතිය මර්දනය කිරීමක් සම්බන්ධයෙන්  පුළුල් භීතියක් ඇති කරන ලදී.

රාජපක්ෂ අගමැති ලෙස පත් කර පැය ගණනක් ඇතුළත, මාධ්‍ය නිදහස සම්බන්ධයෙන් තර්ජන ඇතිවූ අතර, පසුගිය වසර 4ක් තිස්සේ රාජ්‍ය මාධ්‍ය ආයතන විසින් පෙන්වූ සාපේක්ෂ ස්වාධීනත්වය සෝදා පාළුවකට ලක් විය. මාධ්‍ය ආයතනවල ප්‍රධාන කතෘවරුන්ට සංස්කාරක ප්‍රතිපත්ති සම්බන්ධයෙන් තිබූ පාලනය අහිමි වූයේ රාජපක්ෂ ලැදි සංගම් විසින් රජයේ මාධ්‍ය ආයතනවල පාලනය අතට ගත් බැවිනි. පසුව මාධ්‍ය සුවිශේෂී දේශපාලනික සිද්ධි වාර්තා කිරීමෙන් වළක්වන ලදී.  කුමන්ත්‍රණයට විරුද්ධව මාධ්‍ය සාකච්ඡාවක දී අදහස් දැක්වූ ප්‍රසිද්ධ සිවිල් සමාජ ක්‍රියාකාරියෙකුට විරුද්ධව  විමර්ශනයක් සිදු කරන ලද්දේ ඔහු මාධ්‍ය සාකච්ඡාවේ දී දැක් වූ අදහස් සම්බන්ධයෙනි. ජනාධිපතිවරයා විසින් ද ඔහු සහ රාජ්‍ය නොවන සංවිධාන සම්බන්ධයෙන් සෘණාත්මක අදහස් දක්වන ලදී. එසේම ජනාධිපතිවරයා විසින් සමලිංගික-ද්විලිංගික-සංක්‍රාන්තිසමාජභාවී-අන්තර්ලිංගික-කුයර් (LGBTIQ)  ප්‍රජාව හෙළ දකිමින්, එක්සත් ජාතික පෙරමුණු රජය සම්බන්ධයෙන් එය සමනළයන් විසින් කර ගෙන යන්නක් බව කියමින්, සමනල්ලු යන්න LGBTIQ ප්‍රජාවට අපහාස වෙන වචනයක් ලෙස භාවිතා කරන ලදී.

කුමන්ත්‍රණයට පසුව සහ පෙර, උතුරු සහ නැගෙනහිර පළාත් තදින් මිලිටරිකරණය වී තිබූ අතර, අතුරුදහන්වීම් සහ ඉඩම් සම්බන්ධයෙන් දිගු කාලීන විරෝධතා තවදුරටත් අඛණ්ඩව පැවතුනි. නොවැම්බර් මාසය විශේෂයෙන් වැදගත් වූ අතර, උතුරු නැගෙනහිර ඇතැම් දෙමළ ජනතාව විසින් මියගිය එල්ටීටීඊ සාමාජිකයන් සැමරීම සිදු කළේ, හමුදාව විසින් බුල්ඩෝසර් කරන ලද සොහොන් භූමි යම් පමණකට හෝ ප්‍රතිසංස්කරණය කිරීමට ගත් සති ගණනක උත්සාහයන් ද සමගය. මේ සන්දර්භය තුළ, දෙමළ ක්‍රියාකාරීන් සහ දේශපාලනඥයන් කිහිප දෙනෙකුට බාධා කිරීම්, තර්ජනය, බිය ගැන්නවීම්, සහ අවේක්ෂණය (surveillance) ආදියට රටේ වෙනත් පළාත්වල අයට වඩා වැඩි මට්ටමකින්, ලක් වන්නට සිදු විය. පොලීසියේ ත්‍රස්ත විමර්ශන අංශයට ක්‍රියාකාරීන් දෙදෙනෙකු ප්‍රශ්න කිරීම් සඳහා කැඳවා තිබූ අතර, ඊට හේතු අපහැදිලිය. නැගෙනහිර, පොලිසිය විසින් දෙමළ රැඳවියකුගේ බිරිඳට උපවාසය අවසන් කරන ලෙස බල කර ඇත.

එසේම රටේ විවිධ පැතිවල, අදහස් ප්‍රකාශනයේ නිදහස සම්බන්ධයෙන් විවිධ ස්වරූපයේ උල්ලංඝණය කිරීම් කිහිපයක් ද දක්නට ලැබුනි. පසුගිය මාසවලදී හිරිහැර සහ බිය ගැන්වීම්වලට ලක්වූ ජනමාධ්‍යවේදියකුගේ සොහොයුරා සහ යහළුවන් ත්‍රස්ත විමර්ශන ඒකකය විසින් කැඳවා තිබූ අතර, තවත් ජනමාධ්‍යවේදීන් කිහිප දෙනෙකුට උසාවිය ඉදිරිපිට දී සිවිල් ඇඳුමෙන් සැරසුණු නාවික හමුදා නිලධාරීන් විසින් පහර දීමකට ලක් කර ඇති අතර, විදෙස් වාර්තාකරුවකු ද හිංසනයට පාත්‍ර වූ බවට මාධ්‍ය අයිතිවාසිකම් ආයතනයක් විසින් ප්‍රකාශ කරන ලදී. එල්ටීටීඊය සම්බන්ධයෙන් විවේචනාන්තමක වූ චිත්‍රපටියක් යාපනය අන්තර්ජාතික චිත්‍රපට උළෙලේ ප්‍රසිද්ධියට පත්කළ ලැයිස්තුවට අඩංගු කිරීමෙන් පසුව, ඉවත් කර ගනු ලැබිණි.  කිසියම් ශිෂ්‍ය කණ්ඩායමක් විසින් පේරාදෙණිය විශ්ව විද්‍යාලයේ පැවැත්වීමට සූදානම් කර තිබූ මානව හිමිකම් ගැටළු දැක්වෙන ඡායාරූප ප්‍රදර්ශනයක් පැවැත්වීමට ඉඩ දුන්නේ නැත. බන්ධනාගාර ඝාතන සම්බන්ධයෙන් දිගටම ලියූ ජනමාධ්‍යවේදියකුට සිද්ධියේ සැකකරුවන් වන අත්අඩංගුවට පත්ව, රිමාන්ඩ් බන්ධනාගාර ගතවී, පසුව ඇප මත නිදහස්ව සිටින පොලිස් නිලධාරියකු ඇතුළු පිරිසක් විසින් විසින් තර්ජනය කර ඇති බවට වාර්තා වේ.

එම විශ්ව විද්‍යාලයේ සහ වයඹ විශ්ව විද්‍යාලයේ නවක වද විරෝධී ශිෂ්‍යයන්ට අනෙකුත් ශිෂ්‍යයන්ගේ බිය ගැන්වීම්වලට සහ තර්ජනවලට ලක් වීමට සිදු වී ඇත. ව්‍යවස්ථා කුමන්ත්‍රණයේ උච්ච අවස්ථාවේ දී, සහ ලංකාවේ ඉහළම හමුදා ධූරය දරන නිලධාරියා පැහැර ගැනීමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් අත්අඩංගුවට ගත් සන්දර්භයක දී, ප්‍රමුඛ පෙළේ පොලිස් විමර්ශන නිලධාරියකු මාරු කළ අතර (බරපතල පීඩනය හමුවේ නැවත පෙර ධූරයේම පිහිටුවන ලද), මෙසේ කරන ලදුව ඇත්තේ ජනාධිපති උපදෙස් සහ අදාළ විමර්ශන නිලධාරියා විසින් විමර්ශනයට ලක් කරනු ලබන එකී හමුදා නිලධාරියාගේ බලපෑම මත බවට චෝදනා කෙරේ. දෙමළ දේශපාලන සිරකරුවන් නිදහස් කරන ලෙස ඉල්ලූ දෙමළ ශිෂ්‍යයන්ට කිසියම් සිංහල පිරිමි පිරිසක් විසින් තර්ජනය කර ඇත. එසේම පොලිස් රැඳවුම් භාරයේ සිටිය දී මියගිය බවට චෝදනා කෙරෙන පුද්ගලයකුගේ මරණය සම්බන්ධයෙන් විරෝධතාවේ නියැලි පිරිසකට පොලිසිය විසින් කඳුළු ගෑස් ප්‍රහාර එල්ල කර ඇති බවට වාර්තා වේ.

INFORM அறிக்கை இலங்கையில் கருத்து வேறுபாட்டின் அடக்குமுறை  ஒக்ரோபர் – டிசம்பர் 2018   

2018 ஒக்ரோபரிலிருந்து டிசம்பர் வரை, இலங்கையில் கருத்து வேறுபாட்டின் அடக்குமுறை தொடர்பான சில குறிப்பிடத்தக்க சம்பவங்களின் பொதுவான போக்குகளையும், விபரங்களையும் இந்த அறிக்கை வழங்குகின்றது. சூழமைவினை நிறைவேற்றுச் சாராம்சம் விபரிப்பதுடன், போக்குகளையும், அத்துடன் முக்கியமான கண்டுபிடிப்புக்களையும் பகுப்பாய்கின்றது. பிரதான பிரிவில் 4 வகுதிகளின் கீழ் மூலங்களுடன் அறிக்கையிடப்பட்ட 28 சம்பவங்களின் சாராம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஊடக அறிக்கைகள், INFORMக்கு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் மற்றும் INFORM பணியாளரினதும், ஊடகங்களினதும் அவதானிப்புக்கள் மற்றும் அனுபவம் ஆகியன அறிக்கைக்கான தகவலின் மூலங்களாக விளங்குகின்றன.

இலங்கையில் என்றுமே சம்பவித்திருக்காத அரசியலமைப்புச் சதிப்புரட்சியொன்றை இந்த மூன்று மாத காலம் கண்டது. ஒக்ரோபர் 26இன் இரவன்று, அண்ணளவாக நான்கு வருடங்களுக்கு இலகுவற்ற கூட்டு அரசாங்கத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி சிறிசேன பதவிநீக்கினார். அத்துடன், எதிரியாக மாறிய தனது முன்னாள் அரசியல் கூட்டாளியும், 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தார். பாராளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி ஒத்திவைத்ததுடன், பின்னர் அதைக் கலைத்தார். அத்துடன் புதிய அமைச்சர்களையும் நியமித்தார். பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்ததைத் தவிர, சகல ஏனையவையும் அரசியலமைப்புக்கு மாறானவை எனக் கருதப்படுகின்றது. பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக உடல்ரீதியானதும், வாய்மொழியிலானதுமான தாக்குதல்களுக்கு மத்தியில், ராஜபக்‌ஷவுக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையினரால் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களின் மூர்க்கத்தனமான நடத்தையானது பாராளுமன்ற உறுப்பினர்களும், பொலிசாரும் காயமடைவதற்கு இட்டுச்சென்றது. ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கும் நாடு பூராகவும் போராட்டங்கள் இருந்தன. பிரதமராகச் செயற்படுவதிலிருந்து ராஜபக்‌ஷவை நிறுத்தும் இடைக்கால உத்தரவுகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியதுடன், பாராளுமன்றத்தைக் கலைத்தமை அரசியலமைப்புக்கு மாறானது என மீ-உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது 50 நாள் ஸ்தம்பித்த நிலை முடிவுக்கு வந்ததுடன், இது பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை மீள்-நியமிப்பதற்கு ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தியது. நொவம்பரில் அட்டவணைப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட வாசிப்பு நிச்சயமற்றதாக பின்போடப்பட்டதுடன், அரசியல் மற்றும் பொருளாதார உறுதியற்றதன்மைக்கு நெருக்கடிநிலை இட்டுச் சென்றது. மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் ஸ்தம்பிதமடைந்துவிடும் அத்துடன் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் காணப்பட்டதை விட கருத்து வேற்றுமை மீது அதிகளவு பாரதூரமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பரவலான அச்சங்களுக்கு ராஜபக்‌ஷ மீளத்திரும்புவதன் வாய்ப்புவளம் இட்டுச்சென்றது.

பிரதமராக ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டு சில மணித்தியாலங்களுக்குள், ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக அச்சுறுத்தல்கள் இருந்ததுடன், அரசாங்க ஊடக நிறுவனங்களினால் கடந்த நான்கு வருடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சார்புரீதியிலான சுதந்திரம் அரித்துதின்னப்பட்டது. அரசாங்க ஊடக நிறுவனங்களின் கட்டுப்பாட்டினை ராஜபக்‌ஷவுக்கு விசுவாசமான தொழிற்சங்கங்கள் கட்டுப்பாட்டுக்கு எடுத்ததினால், பதிப்புக் கொள்கைகள் மீதான கட்டுப்பாட்டினைப் பதிப்பாசிரியர்கள் இழந்தார்கள். பின்னர், குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்ச்சிகளில் இருந்து ஊடகங்கள் தடுக்கப்பட்டன. சதிப்புரட்சியை எதிர்த்த முக்கியமான சிவில் சமூக செயலார்வலர் ஒருவர், பத்திரிகை மகாநாடொன்றில் அவர் செய்த கருத்துரைகள் மீதான அடிப்படையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர் குறித்தும், அரச சார்பற்ற தாபனங்கள் குறித்தும் மறுதலையிலான மேற்கோள்களை ஜனாதிபதி செய்தார். வண்ணாத்திப்பூச்சிகளினால் நிருவகிக்கப்படும் ஒன்றாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தைக் குறிப்பிட்டு பெண் ஓரினச்சேர்க்கையாளர் – ஆண் ஓரினச்சேர்க்கையாளர் – ஈரினச்சேர்க்கையாளர் – மாற்றுப்பாலினத்தவர் – இருபால் உடலமைப்பினர் – பால்நிலைக் குழப்பத்திலுள்ளவர் [Lesbian – Gay – Bisexual – Transgender – Intersex – Queer (LGBTIQ)] சமூகத்தை நிந்திப்பதற்கான கருத்துரைகளையும் ஜனாதிபதி செய்தார். LGBTIQ சமூகத்தை நிந்திப்பதற்காக வண்ணாத்திப்பூச்சிகள் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.

சதிப்புரட்சிக்கு முன்னரும், பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்துமே கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டிருந்ததுடன், காணாமலாக்கப்பட்டவர்களினதும் மற்றும் நிலத்தினதும் மீது நீண்ட காலப் போராட்டங்கள் தொடர்ந்தன. இராணுவத்தினால் இடித்துத்தள்ளப்பட்ட மயானங்களைச் சாத்தியமான அளவுக்கு புனரமைப்பதற்கான வாரங்களைக் கொண்ட தயாரிப்புக்களின் பின்னர், மரணமடைந்த எல்.ரி.ரி.ஈ. போராளிகளை நினைவூட்டுவதில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள சில தமிழர்கள் ஈடுபட்டிருந்ததினால், நொவம்பர் மாதம் குறிப்பிட்டரீதியில் முக்கியத்துவமாக விளங்கியது. இச் சூழ்நிலையில் பெரிதுமே இக் காலத்தின் போது, நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களை விட, பெருமளவு தமிழ் செயலார்வலர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் தடைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும் அத்துடன் கண்காணிப்புக்கும் முகங்கொடுத்தனர். தெளிவற்ற காரணங்களுடன், பொலிஸின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இரு செயலார்வலர்கள் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டனர். கிழக்கில், உண்ணாவிரதப் போராட்டமொன்றைக் கைவிடுமாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவரின் மனைவி பொலிஸாரினால் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இக் காலத்தின் போது, நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் வேறுபட்ட அமைப்புக்களில் கருத்துச் சுதந்திரத்தின் பெருமளவு மீறல்கள் இருந்தன. முன்னைய மாதங்களில் தொல்லைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்த தமிழ் இதழியலாளரின் சகோதரரும் மற்றும் நண்பர்களும் TIDஇனால் வரவழைக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகமொன்றுக்கு வெளியே சிவில் உடைகளில் இருந்த கடற்படை ஆளணியினரால் சில இதழியலாளர்கள் தாக்கப்பட்டதுடன், வெளிநாட்டு நிருபர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாக ஊடகக் கண்காணிப்பகம் வலியுறுத்தியது. எல்.ரி.ரி.ஈ. குறித்து விமர்சித்த திரைபடமொன்று யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவில் பகிரங்கமாக பட்டியலிடப்பட்ட பின்னர் இடைநிறுத்தப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த மனித உரிமைகள் குறித்த பிரச்சனைகளைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியொன்று சில மாணவர்களினால் அனுமதிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணை மீது விடுவிக்கப்பட்ட பொலிஸ் அலுவலர் ஒருவர் உட்பட வழக்கின் சந்தேகநபர்களினால் அச்சுறுத்தப்பட்டதாக சிறைச்சாலைப் படுகொலைகள் பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்த இதழியலாளர் ஒருவர் அறிக்கையிட்டுள்ளார்.

அதே பல்கலைக்கழகத்திலும் அத்துடன் வயம்ப பல்கலைக்கழகத்திலும் ஏனைய மாணவர்களிடமிருந்து பகிடிவதைக்கு எதிரான மாணவர்கள் பயமுறுத்தலுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்தார்கள். சதிப்புரட்சியின் உச்சநிலையிலும், ஆட்கடத்தல் வழக்கொன்று தொடர்பில் நாட்டின் உயர் பதவிநிலையில் சேவையாற்றும் இராணுவ அதிகாரியின் சூழமைவிலும் ஜனாதிபதியின் உத்தரவினதும் அத்துடன் சொல்லப்பட்ட விசாரணையாளரினால் விசாரிக்கப்படும் அதே இராணுவ அதிகாரியினதும் அழுத்தத்தினதும் காரணமாக உயர் பதவிநிலையிலான பொலிஸ் விசாரணையாளர் ஒருவர் இடமாற்றப்பட்டார் (அத்துடன் அதைத் தொடர்ந்து பரவலான அழுத்தத்தின் காரணமாக மீளப்பதவிக்கு அமர்த்தப்பட்டார்). தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பினைக் கோரிய தமிழ் மாணவர்கள் சில சிங்கள ஆடவர்களினால் அச்சுறுத்தப்பட்டனர். பாதுகாவலில் சார்த்துரைக்கப்பட்ட மரணம் பற்றி போராடிய மக்கள் மீது கண்ணீர்புகைக் குண்டு சுட்டதாக பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Popular Posts

Login/Sign up